பக்கம்:மக்கட் செல்வம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாப்பாவும்

85



இனி, பாரதியார் அந்தக்குழந்தை ஒவ்வொருவகையில் தரும் இன்பங்களை எளிமையாக விளக்கிக் கொண்டே செல்லுகின்றார். ஆடி ஓடி வரும் குழந்தையைக் காணுவதில் பெறும் இன்பமும், அக்குழந்தையைக் கட்டித் தழுவுவதால் பெறும் இன்பமும், அக் குழந்தையை ஊரார் 'மிக நல்ல சூழந்தை, அழகிய குழந்தை' என்று பலவாறாகப் புகழந்தால் பெறும் இன்பமும், முத்தமிட்டால் பெறும் இன்பமும் இவை போன்ற இடையறா இன்பங்களை எண்ணி எண்ணி மகிழ்கின்றார். அவைகளெல்லாம் நாடறிந்த பாடல்கள் தாம்.

கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளம் தான்
கள் வெறி கொள்ளுதடி
உன்னைத் தழுவிடிலோ-கண்ணம்மா

உன்மத்தம் மாகுதடி.

என்பது அப்பாடல்களுள் ஒன்று.

அன்பின் செல்வி

இந்தகைய அன்புச் செல்வத்தைச் சீராட்டிப் பாராட்டிப் போற்றி வளர்ப்பதோடு-அதன் பெருமையையும் இனிமையையும் புகழ்வதோடுபெற்றவர்கள் அச்செல்வத்தை எவ்வாறு போற்ற வேண்டும் என்பதையும் பாரதியார் நன்கு எடுத்துகாட்டுகின்றார். குழந்தைக்கு வருதுயரத்தைத் தன் துயராக எண்ணி, அதற்காகத் தான் வருந்தி மருந்து உண்ணும் தாய்மை போற்றத்தக்க ஒன்றல்லவா? பெற்றதாய் அந்தக் குழந்தைக்காக என்னென்ன தியாகங்தளைச் செய்ய வேண்டியிருக்கிறது! அவ்வாறு தியாகங்களைச் செய்து போற்றும் பொருளை எத்துணைக் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றவேண்டும். 'பொருள் தனைப் போற்றி வாழ்' என்பது தமிழர்களுக்கு அவர் தம் மூதாட்டியார் ஔவை காட்டிய ஒரு நெறியல்லவா! சாதாரணப் பொருள்களையே போற்றி வாழவேண்டுமென்றால் செல்-