பக்கம்:மக்கட் செல்வம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

பாரதியும்



வத்துட் செல்வமாகிய மக்கட் செல்வத்தை எத்தனைச் சிறந்த வகையில் போற்றி வளர்க்கக் கடமைப் பட்டிருக்கிறார்கள் மக்கள். ஆம்! குழந்தைக்குச் சிறு ஊறு நேர்ந்தாலும்கூடப் பெற்ற உள்ளம் தாங்காது. அக்குழந்தையின் கண்ணில் நீர்வடித்தால் பெற்றவர் நெஞ்சம் பிளந்தது போலாகும் மல்லவா? அவர் தம் நெஞ்சு குழந்தைகள் குலாவும் இடமாகி விட்டபிறகு, குழந்தைக்கு நேரும் ஒவ்வொரு சிறுதுன்பமும் அவர்கள் உள்ளத்தைச் சுட்டெரிக்கும் என்பது உண்மையன்றோ! இவைகளையெல்லாம் எண்ணி எண்ணிப் பார்க்கிறார் பாரதியார். எண்ணம் பாட்டாக உருப்பெற்று ஓடி வருகிறது. இதோ அவர் தம் அடிகள்,

'சற்றுன் முகஞ் சிவந்தால்-மனது
சஞ்சல மாகுதடி
நெற்றி சுருங்கக் கண்டால்-எனக்கு
நெஞ்சம் பதைக்குதடி'

'உன் கண்ணில் நீர்வடிந்தால்-என்நெஞ்சில்
உதிரம் கொட்டுதடி
என் கண்ணிற் பாவை யன்றோ-கண்ணம்மா

என்னுயிர் நின்னதன்றோ'

இந்த அடிகளிலே அவர் எத்துணை உணர்ச்சி வகையிலே குழந்தை வாழ்வே தன் வாழ்வாக எண்ணும் தாயார் நிலையை விளக்குகின்றார். இந்த மெய்த்தாயார் தம் பண்பினையும் முன் ஒருகடிதத்தில் நான் எழுதிய 'பால் கொடுத்தால் பழுதடைவோம்' என எண்ணும் தாயர் தம் பண்பினையும் ஒப்பிட்டுப்பார். குழந்தைகளே செல்வம் என்று எண்ணி, அவர்தம் வாழ்வே தம் வாழ்வு என்று உணர்ந்து, அவர் மகிழ்ந்தால் தாம் மகிழ்ந்தும், அவர் வாடின் தாம் அதிகமாக வாடியும் நிற்கும் தாய் உள்ளமே தரணியை வாழ வைப்பதாகும். அந்த மெய்த்