பக்கம்:மக்கட் செல்வம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாப்பாவும்

87



தாயர் நிலையைத்தான் பாரதி இவ்வாறெல்லாம் விளக்குகிறார்.

இனி, பாரதியார் இக் குழந்தைச் செல்வத்தை விடுத்து வேறு ஒன்றுமே மக்களுக்குச் சிறந்தவை இல்லை என்பதை நன்கு விளக்குகிறார். வள்ளுவர் குழலும் யாழும் மக்கள் மழலைச் சொல்லுக்கு முன் நிற்கமாட்டாதவை என்பதைக் கூறினார் அல்லவா? பாரதி அதற்குமேலும் ஒருபடி தாண்டி, எடுகள் எத்தனை படித்தாலும் அவை கற்றுத்தரும் பாடங்கள் குழந்தையின் அன்புப் பாடத்துக்கு முன்னிற்க மாட்டாதன என்பதைக் காட்டுகின்றார். மற்றும் அன்பு காட்டுவதிலே குழந்தை, தெய்வங்களுக்கெல்லாம் மேம்பட்டது என்பதையும் காட்டி விட்டார். ஆம்! நான் முன் உனக்குக் 'குழந்தையும் தெய்வமும்' என்ற தலைப்பில் எழுதிய கடிதத்தில் எப்படிக் குழந்தை தெய்வத்தோடு ஒத்திருக்கின்றது என்பதை எடுத்துக் காட்டினேன் அல்லவா! இங்கே பாரதி அதற்குமேலேயும் ஒருபடி சென்று குழந்தை அன்பின் முன் தெய்வ அன்பு இணை நிற்காது என்கின்றார்.

'இன்பக் கதைகளெல்லாம்-உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலே-உன்னை நேர்

ஆகுமோர் தெய்வம் உண்டோ'

ஷஎன்பது அவர் வாக்கு.

இறுதியாகப் பாரதியார் உலகில் பொன்னையும் மணியையும் பிற செல்வங்களையும் தேடித்தேடி உழலும் மக்களுக்கு அறிவுறுத்துவது போன்று இக் குழந்தையைக் காட்டிலும் அணிந்து அணைக்கும் பூணும், நிலைத்து மகிழ வைக்கும் செல்வமும் வேறு கிடையாது என்கின்றார். அப் பாடலைமட்டும் காட்டி இக் கடிதத்தை முடித்துக் கொள்ளுகின்றேன். ஆம்! இக்கடிதங்களை