பக்கம்:மக்கட் செல்வம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

பாரதியும் பாப்பாவும்


யெல்லாம் முறையாகப் படிக்கும் நீ உன் பிறசெல்வங்கள் அனைத்திலும் மேலான செல்வம் உன் குழந்தையே என்பதை எண்ணிப் போற்றவேண்டும். என்ன? புரிகிறதல்லவா? ஆம்! ஆம்! பிள்ளையே பெருஞ் செல்வம்.

‘மார்பில் அணிவதற்கோ—உன்னைப்போல்
       வைரமணிகள் உண்டோ ?
சீர்பெற வாழ்வதற்கே—உன்னைப்போல்

       செல்வம் பிறிதுமுண்டோ’

என்ற பாரதியாரின் பாட்டு என்றென்றும் நீ எண்ணிப் போன்ற வேண்டிய ஒன்று என்பதை மறவாதே.

என்ன எண்ணுகிறாய்? ‘ஓடிவிளையாடு பாப்பா’ என்ற பாரதியின் பாப்பாப் பாட்டைப் பற்றி ஒன்றும் கூறவில்லை என்றுதானே? அப்பாடல் நாடறிந்த ஒன்று. நீ நாள்தோறும் பாடியது. மற்றும் அது சற்று வளர்ந்த ஓடி ஆடும் குழந்தையை முன்னிறுத்திப் பாடியது. உன் குழந்தைக்கு இப்போது அப்பாடல் வேண்டாம். தேவையான காலத்தில் நீயே பாடிப் பாடிப் பெருமை கொள், கடிதம் நீளுகிறது. எனவே இன்று இத்துடன் நிற்கின்றேன்.

அன்புள்ள,
அப்பா.