பக்கம்:மக்கட் செல்வம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12.

கருவில் குழந்தை I


அன்புள்ள மங்கைக்கு,

நலன். விழைவு, நீ உன் குழந்தையைக் கொஞ்சிக் குலவும் வேளையில் அக்குழந்தை உன் கருவில் தோன்றி வளர்ந்த வரலாற்றை அறிந்து கொள்வது நல்லது என நினைக்கிறேன். நீ கல்லூரியில் அறிவியல் பாடம் படிக்கும்போது ஓரளவு கருவில் குழந்தை தோன்றி வளர்வதைப்பற்றிப் படித்திருப்பாய். என்றாலும் அதில் அவ்வளவு விளக்கமாக எழுதுவது என்பது இயலாது. மருத்துவக் கலையில் துறைபோகக் கற்ற அறிஞர்கள் தாம் இந்தக் கருவளர் கலைபற்றி ஓரளவு நன்கு அறிந்திருக்கக்கூடும், அவர்களில் சிலர் சிறந்த படங்களோடு பல ஆங்கில நூல்கள் எழுதியுள்ளார்கள், எனினும் தமிழில் அக்கருவளர் சிறப்பைப்பற்றி நல்ல நூல்கள் கிடையா, இரண்டொருவர் அந்த ஆங்கில நூல்களைப்

6