பக்கம்:மக்கட் செல்வம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

கருவில்



கிட்டால் ஒன்பது மாதங்கள் ஆகும். இச் சந்திரமாதக் கணக்கை எண்ணித்தான் போலும் 'பத்து மாதம் சுமந்து பெற்றதாய்' என்று கூறுகின்றார்கள். பட்டினத்தாரும் 'ஐயிரண்டு திங்களாக அங்கமெல்லாம் நொந்து பெற்ற' தாயாரை எண்ணுகின்றார். அவ்வாறு தோன்றிய கரு, தான் வளரும் பத்துத் திங்களிலேயும் எத்தனையோ மாற்றங்களைப் பெறுகின்றது.

கருவின் வளர்ச்சியைப் பற்றிக்கூறுமுன் வேறு இரண்டொரு கருத்துக்களை இங்கே நான்கூற நினைக்கின்றேன். இக்கரு உண்டாவதிலே பரம்பரைத்

தொடர்பு அமைந்துள்ளது என்பதை நம் வீட்டில் பாட்டிமார்கள் கூறுவதை நீ கேள்விப் பட்டிருப்பாய். இதை நாம் வேடிக்கையாக நினைக்கிறோம். ஒருசிலர் அவரவர் குடும்பத்தில் மறைந்த சில பெரியவர்களைச் சொல்லிக் குழந்தைகள் அவர்களை ஒத்தே உள்ளன என்றும் கூறுவார்கள். ஏன்? உன் குழந்தை பிறந்ததும் அது உன் அம்மாவைப்போலவே இருக்கிறது என்று பலரும் சொன்னார்களல்லவா! ஆம்! கருத்தோற்றத்தில் பரம்பரைப் பண்பு இருக்கிறது என்ற உண்மையை நம்நாட்டுப் பாட்டியர் மட்டும் சொல்லவில்லை. மேல் நாட்டு ஆராய்சியாளர்கள் அந்த உண்மையை ஒத்துக்கொண்டு தமது ஆராய்ச்சி நூல்களில் வெளியிட்டுள்ளார்கள். இவ்வாறு பரம்பரைத் தொடர்பு பற்றுவதால் ஒரு குடும்பத்திலேயே பெண்கொள்ளவோ, கொடுக்கவோ கூடாது என்கின்றார்கள் மேல்நாட்டு ஆசிரியர்கள்.நம் நாட்டில் 'ஒருகுலத்தில் பெண்கள் கொடோம், ஒரு குலத்தில் கொள்ளோம்' என்று குறவரும் பள்ளரும் பாடும் பாடல்களை எள்ளி நகையாடுவதை நிறுத்தி, இந்த மேனாட்டு


*Gray's Anatomy P. 87, Mustaf's Systematic Anatomy, and also by Father Gregor Mendal and F. B. Ford