103
தங்கள் முகாமுக்கு அழைத்துக் கொள்வதே அறிவுடைமை என்று எண்ணினர். அல்லலும் ஆபத்தும் விளையும் வகையில் ஆட்சிமுறை செல்வதைத் தடுத்தாக வேண்டும் என்ற பெருநோக்கம் கொண்ட பிரபுக்கள் சிலர், மாமன்றத்துடன் தோழமை பூண்டனர்.
மன்னன் ஸ்காத்லாந்திலிருந்து கொண்டு, தன் துணைக்குப் பலம்தேடிப் பார்த்தான், சில பிரபுக்கள் முன் வந்தனர், எனினும், தாக்குதலுக்குத் தேவையான அளவிலும் வகையிலும் துணைதிரளவில்லை. மன்னன் மீண்டும் இலண்டன் மாநகர் வந்தான்—வரவேண்டிய நிலைமை, புதியதோர் ஆபத்தால் ஏற்பட்டது.
அயர்லாந்திலே புரட்சி மூண்டுவிட்டது! அயர் மக்கள் நீண்ட காலமாகக் கொடுங்கோலால் தாக்குண்டு தவித்தவர்கள். மேலும், அங்கு சென்று குடி ஏறிய பிரிட்டிஷ் மக்கள், அயர் மக்களை அடிமைகளாக்கினர், அக்ரமம் புரிந்தனர். ஸ்டாபோர்டு காலத்தில் சகிக்கொணாக் கொடுமைகளைக் கண்டனர் அயர் மக்கள். பிரிட்டனிலும் ஸ்காத்லாந்திலும் கொந்தளிப்பு இருக்கக் கண்டு, தளைகளை அறுத்துக்கொள்ள, புரட்சி செய்தனர். இதனை அடக்கப் படை வேண்டும், படை பயன்பட, பணம் வேண்டும். மன்னனுக்கு வாய்ப்பாகவும் இது அமைதல் கூடும். அயர் புரட்சியை அடக்க, மாமன்றம் முன்வந்து பணம் தந்தால், அதைக்கொண்டு அமைக்கப்படும் படையைக்கொண்டு, மன்னன் மாமன்றத்தை தாக்கித் தகர்க்கக் கூடுமல்லவா! நல்ல வாய்ப்பு! இந்த நெருக்கடி என்று தோன்றிற்று.
இலண்டன் நகரில் நடைபெற்ற வரவேற்பும் உபசாரமும் கண்டு மன்னன் புதிய நம்பிக்கைகூடப் பெற்றான்.
மக்கள்—குறிப்பாக பிரமுகர்கள் மாமன்றத்தார்