உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

போலத்‌ தன்னிடம்‌ அருவருப்பு கொள்ளவில்லை, ‘ராஜ பக்தி’ இருக்கத்தான்‌ செய்கிறது, என்று எண்ணி, ஓரளவு களித்தான்‌.

அந்த வரவேற்பின்‌ பொருளை மன்னன்‌ உணரவில்லை. மக்கள்‌ உரிமையை மன்னன்‌ வற்புறுத்தலால்‌ வழங்கினான்‌ எனினும்‌; அதைச்‌ செய்ததற்கு மகிழ்ச்சி தெரிவிக்கவும்‌, இதுபோல மக்களின்‌ உரிமையை வழங்கும்‌ மன்னராட்சிக்கே ஆதரவு கிடைக்கும்‌ என்பதை அறிவிக்கவுமே, வரவேற்பு நடைபெற்றது. மன்னன்‌ இதை மறைந்து கிடக்கும்‌ ஆதரவு என்று தவறாகக்‌ கணக்கிட்டான்‌.

மாமன்றம்‌ நிலைமையை விளக்கிவிட்டது. அயர்‌ புரட்சி பற்றிய பிரச்சனையைக்‌ கவனிக்கக்‌ கூடிய மாமன்றம்‌, படை திரளட்டும்‌, ஆனால்‌ அதன்‌ தலைவராக யார்‌ இருத்தல்‌ வேண்டும்‌ என்பதை மாமன்றமே தீர்‌மானிக்கும்‌ என்று முடிவெடுத்தது. மன்னன்‌, இதற்கா இணங்குவான்‌!

படையைத்‌ தலைமைதாங்கி நடத்தும்‌ உரிமை முற்றிலும்‌ மன்னனைச்‌ சார்ந்தது என்று வாதிட்டான்‌. வம்பு வளருகிறது என்று மாமன்றம்‌ எச்சரித்தது; இந்த மூலாதார உரிமையை ஒருக்காலும்‌ இழக்க இணங்கேன்‌ என்‌றான்‌ மன்னன்‌—பிளவு தெரியலாயிற்று.

அயர்‌ புரட்சியை அடக்க நானோர்‌ தொண்டர்படை திரட்டுவேன்‌, பதினாயிரவர்‌ முன்வருக! என்றான்‌ மன்‌னன்‌ படை திரளவில்லை, மாமன்றம்‌ தடைவிதித்தது.

மன்னன்‌ மீண்டும்‌ தத்துவம்‌ பேசினான்‌—கேட்பார்‌ இல்லை.

மாமன்றம்‌, பழைய ஏட்டைப்‌ புரட்டிப்பார்த்தது, செய்யாது வைத்திருக்கும்‌ காரியம்‌ எது இருக்கிறது