உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105

என்று அறிய. மக்களால்‌ வலியுறுத்தப்பட்டுவரும்‌ மத அலுவலர்களில்‌ உயர்‌ நிலையில்‌ உள்ளவர்கள்‌ அரசியலில் இடம்‌ பெற்று, செல்வாக்குடன்‌ இருந்தனர்‌. ‘அந்த உலகம்‌’ குறித்து அரும்‌ உபதேசம்‌ ஆற்றவேண்டியவர்‌களுக்கு ‘இந்த உலக’ அரசியலில்‌ அக்கரை ஏன்‌ என்று புதுக்‌ கருத்தினர்‌, கேட்டனர்‌. ஜேம்சும்‌ சார்லசும்‌ உறுதியுடன்‌ மத அலுவலர்‌ சார்பில்‌ வாதாடினர்‌. “பாதிரி இல்லையேல்‌ பார்த்திபனும்‌ இல்லை!” என்று ஜேம்ஸ்‌ கூறினான்‌. சார்லசுக்கும்‌ அதே கொள்கை. அந்த மத அலுவலர்களும்‌, பிரபுக்கள்‌ சபையிலே இடம்‌ பிடித்துக்‌ கொண்டு, எதேச்சாதிகாரத்தை ஆதரித்து வந்தனர்‌. எனவே மக்கள்‌ அவர்களுடைய செல்வாக்கைச்‌ சிதைத்‌தாகவேண்டும்‌ என்று மன்றம்‌ கூறிற்று. மாமன்றத்திலே, இந்தப்‌ பிரச்னை எடுத்துக்கொள்ளப்பட்டது. மத அலுவலர்களின்‌ செல்வாக்கு, எளிதிலே அழிக்கக் கூடுயதல்ல—காரணம்‌ காட்டுபவர்களல்லவே, கர்த்தரைக் காட்டுபவர்கள்! எனவே பிரச்னை காரணமாக இருபிரிவுகள் தோன்றிவிட்டன; ஒன்றை ஒன்று கேலிபேசவும் தலைப்பட்டன.

மாமன்றத்தின்‌ சார்பினருக்கு, ரவுண்டுஹெட்ஸ்‌ என்றும் மன்னன் சார்பினருக்குக் கவாலியர் என்றும் பெயரிடப்பட்டது; குட்டைமுடியினர், குதிரைப்படையினர், என்ற பொருள்படும், ஏசலுரைகள் வீசப்பட்டன்.

அரசக்‌ ௧ருஊலக்‌ காப்பாளர்‌ பதவி அளித்து, மக்கள்‌ நண்பன்‌ பிம்‌ என்பவரை மயக்கி மடக்கலாம்‌ என்று மன்னன்‌ எண்ணினான்‌, இயலவில்லை.

மாமன்றம்‌, அடுத்த கட்டம்‌ சென்றது. கத்தோலிக்‌கரை ஏவிவிட்டுக்‌ கலாம் விளைவிக்கவும்‌, போப்பாண்ட-