106
வரிடம் உதவிபெற்றுத் தாக்குதல் நடத்தவும் முயன்றதாக, ராணி எனிரிடாமீது குற்றப்பத்திரிகை தயாரிக்கலாயிற்று, மன்னன் நடுங்கினான். எனிரிடாவிடம் நிரம்ப அன்பு கொண்டவன் மன்னன். தன் ஆசைக்கினியாளுக்கே ஆபத்து என்றதும் மன்னனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, இவ்வளவு துடுக்குத்தனத்துக்கும் காரணமாக உள்ள, பிம், ஹாம்டன், ஹாலிஸ், ஆஸ்லிரிக், ஸ்ட்ரோட் எனும் ஐவரையும், கைதுசெய்ய உத்தரவிட்டான்.
ஐவர்மீது, நாட்டைத்தாக்க வேறு நாட்டவரைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
மரணதண்டனைதான் கிடைக்கும் இந்தத் துரோகத்துக்கு!
மன்னனை எதிர்ப்பது மட்டுமல்ல, வெளி நாட்டைத் தூண்டிவிட்டுத் தாயகத்தைத் தாக்க எற்பாடு செய்வது மாபெருங் குற்றம்.
கோபத்தைவிட அதிகமாக மக்களுக்குச் சிரிப்புதான் பொங்கியிருக்கும், இந்தக் குற்றச்சாட்டு கேட்டு.
தாயகத்தின் தன்மானத்தைத் தழைத்திடச் செய்வதற்காக, தன்னலத்தை மறந்து, பொதுப்பணியில் ஈடுபட்டு, சிறையை ஏற்று, ஆபத்துகளைத் துரும்பென எண்ணிப் பணியாற்றி வரும் மக்கள் விடுதலைப் படையின் முன்னணியில் உள்ளவர்கள் இந்த ஐவர்! இவர்களைத் துரோகி; என்று மக்களை வாட்டி வதைக்கும் மன்னன் குற்றம் சாட்டினால், சிரிப்புப் பொங்கத்தானே செய்யும்.
எங்கள் பிம், எமது ஹாம்டன், துரோகிகளா? யாருக்கு? என்ன துரோகம் செய்தனர்? மன்னனை மக்க-