107
ளாட்சி நடத்துக என்று எச்சரித்தனர் ஐவர்! துரோகமா இது? எதேச்சாதிகாரத்கை ஏற்காதீர் என்று எமக்கு அறிவுரை கூறினர் அது துரோகமா? அடக்குமுறைக்கு அஞ்சேல்! என்று வீர உரையாற்றினர். துரோகமா? அரண்மையில் நச்சரவம் இருக்கிறது, அதன் விஷப்பல்லைப் பெயர்த்தாக வேண்டும் என்று கூறினர்! இதில் என்ன துரோகம்! பொதுப் பணத்தைச் சூரையாடினவன், போக போக்கியத்தில் மூழ்கினவன், காமக் களியாட்டக்காரன், காதம் புரிந்தோன், பக்கிங்காமுகள், லாடுகள், ஸ்ட்ரா போர்டுகள், இவர்கள் துரோகிகள்! இந்த ஐவர், எமது தோழர்கள், உரிமைப்போர் வீரர்கள், அவர்கள் மீது சிறு விரல்பட்டாலும், சிரம் அறுப்போம்! என்று மக்கள் முழக்கமிட்டனர். பல ஆண்டுகளாக அவர்கள் மக்கள் பணியாற்றி வந்ததால் ஏற்பட்டிருந்த ஆதரவு, சாமான்யமானதல்ல! மன்னன் அவர்கள் மீது பாய்ந்தது, மதியற்ற செயலாகும். எண்ணற்ற மக்களின் நெஞ்சிலே இடம்பெற்ற அவர்களின் சொல் படைகளைத் திரட்டக் கூடிய வலிவு பெற்றுவிட்டது. அடக்க முடியாதது என்று எண்ணி மக்கள் ஆயாசப்பட்டபோது துணிந்தால் அடக்கலாம் என்று எடுத்துக்கூறி, எதேச்சாதிகாரத்தை அடக்கிக் காட்டிய அம்மாவீரை இழக்கத் துளியும் சம்மதியோம், என்று மக்கள் கூறி, வீறுகொண்டெழுந்தனர்! அந்த ஐவர், நாட்டின் இதய நாடிகள்—கரம் வைத்தால் சிரம் போகும் என்றனர் மக்கள்.
இராணி எனிரிடா கண்ணீர் உகுத்துக் கண்ணாளனை வேண்டி நிற்கிறாள் வேந்தன் ஐவரைச் சிறையிலிட உத்தரவிட்டான்.
உத்தரவைத் தாங்கிக்கொண்டு அதிகாரி வந்தான்—உயிர் பிழைத்துக்கொள்ள வேண்டுமானால் ஓடிப்போ! என்று மாமன்றம், அதிகாரியை விரட்டி அடித்தது.