108
ஐவரின் இல்லங்களிலே அரசன் சார்பினரான படைவீரர் புகுந்தனர்—இழுத்துப் பூட்டினர். மன்னன் தவறு மேல் தவறு செய்தவண்ணம் செல்கிறான். நாடெங்கும் கொதிக்கிறது,
ஐவரைக் கைது செய்ய நானே செல்கிறேன், என்று கூறினான் மன்னன். 300 போர் வீரர் புடைசூழ, சில பிரபுக்கள் உடன்வர, மாமன்றம் வந்தான்.
உள்ளே மாமன்றம் நடைபெறுகிறது, வெளியே மன்னன் முன்னூறு பேருடன், ஐவரைக் கைது செய்ய!
ஐவர், மாமன்றத்தில் இல்லை! அவர்களை நண்பர்கள் வேறிடம் அழைத்துச் சென்றுவிட்டனர். மன்னன் மாமன்றத்துக்குள் நுழைந்தான், எண்பது வீரர் அவனுடன் உள்ளனர், நாடாளும் மன்னன், நாலாந்தர ஐந்தாந்தர அட்டகாசக்காரன்போல, வருகிறான் கண்டறியாத காட்சி, கேட்டறியாத சம்பவம்! இத்தனைக்கும் விலா நொறுங்கியிருக்கும் வேங்கையின் நிலையை எய்தியிருக்கிறான் வேந்தன்.
மாமன்றத்தினர், மரியாதையுடன், எழுந்து நின்று, மன்னனை வரவேற்றனர். அவனுடைய கண்கள் ‘ஐவரை தேடின. “பறவைகள் பறந்துவிட்டன! சரி, நான் வந்தது பலன் தரவில்லை. ஆனால் கபர்தார்! அந்த ஐவரை எப்படியும் என்னிடம் பிடித்து ஒப்படைக்க வேண்டும், அவர்கள் துரோகிகள்! இது உங்கள் அரசன் ஆணை” என்று கூறிவிட்டு வெளிக்கிளம்பினான்.
“உரிமை! உரிமை!” என்று முழக்கமிட்டனர் மாமன்றத்தார்.
மன்னன், மாமன்றத்தைத் தாக்க பலாத்காரத்தைக் கையாளத் தொடங்கிவிட்டான்—சிறு படைதான் நூறு பேர்கள்—எனினும் படைதானே! எனவே, இனி படை