110
செய்யும்படி, மாமன்றம் மன்னன் செயல் சட்ட விரோதமானது என்று தாக்கீது பிறப்பித்தது.
இரு அரசுகள்! நாடு, எதை ஏற்றுக்கொள்வது என்பதை இனிக் களம்தான் தீர்மானிக்கவேண்டும்.
ஐவருக்கு வந்த ஆபத்து, நாட்டு மக்களைக் போர்க் கோலத்தில் கொண்டு வந்து விட்டது. நகரம், புயலுக்குரிய நிலைமையில் இருந்தது. ஆபத்து தன்னை அணுகும் என்ற அச்சம் மன்னனுக்கு! மன்னன் தன் குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு, ஊரார் அறியா வண்ணம் இலண்டன் நகரைவிட்டு, வேறிடம் சென்றுவிட்டான்.
ஐவர், மன்னனைவிரட்டி விட்டனர்! மக்கள் மகிழ்ச்சிப் பெருக்குடன் ஐவரை வரவேற்றனர்.
தேம்ஸ் ஆற்றிலே, படைக்கலங்கள்! கரையெல்லாம் உறுதி படைத்த வீரர்கள்! ஐவர் வருகின்றனர், மாமன்றம் நோக்கி, ஊரே திரண்டு வருகிறது! வெளியூர் இருந்தெல்லாம் மக்கள் கூட்டம்.
மன்னன், மக்கள் சீற்றத்திற்கு இடம் தராத இடம் நாடினான்—விண்சர் எனும் ஊர் போய்ச் சேர்ந்தான். ஐவர் மாமன்றத்தில் எப்போதும் போல் அமர்ந்தனர். போர் மூண்டால், வெற்றி எவர் பக்கம் என்பதைத் அறிவிக்கும் சம்பவமாகி விட்டது, ஐவர் வெற்றி.
இனிப் போரிட்டுத்தான் பிரச்னையின் முடிவு காணவேண்டும், என்ற கட்டம் தோன்றிவிட்டது.
ராணி எனிரிடா, குடும்ப நவமணிகளையும் அணிகளையும் எடுத்துக்கொண்டு, ஐரோப்பா சென்று, விற்று, ஒரு கலம் நிறைய போர்க் கருவிகளை அனுப்பியாகிகிவிட்டது! மன்னன், தன்னை அண்டிப் பிழைக்கும் பிரபுக்களுடன், மந்திராலோசனை நடத்தி, போர்த் திட்டம் தீட்டி-