111
னான். மாமன்றம், செயலாற்றாமலில்லை! துறைமுகப் பட்டினங்களிலே, மாமன்றச் சார்பினர், திரண்டனர்.
ஹல் என்ற ஊரிலே குவித்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துக் கிடங்கு, மாமன்றத்தார் வசமாயிற்று, அதைக் கைப்பற்ற வந்த மன்னனை கிடங்குக்குள்ளே நுழையக்கூடாது என்று காவலாளிகள் தடுத்து நிறுத்தினர். இனியும் என்ன செயல் வேண்டும்! மாமன்றத்தின் கட்டளையின்படி நடந்துகொள்பவர்கள், மன்னனைத் தடுத்து நிறுத்த முன்வந்துவிட்டனர்!
மன்னன் நாட்டிங்காம் எனும் நகர் சென்று போர்க்கொடி உயர்த்தினான்.
“மக்கள்மீது மன்னன் போர் தொடுத்துவிட்டான்! எனவே மன்னன், மாபெரும் துரோகியானான்” என்று மாமன்றம் அறிவித்தது. நாடு அறைகூவலை ஏற்றுக்கொள்வோம் என்றது. படைகள் களம் புகுந்தன உள்நாட்டுப்போர் துவங்கிவிட்டது. தத்துவம் பேசிப் பயன்காணாத மன்னன், இனி இரத்தம் கொட்டி, வெற்றிதேடக் கிளம்பிவிட்டான்.
மக்கள் ஆர்வத்துடன் மாமன்றம் திரட்டிய படையில் சேர்ந்தனர். வெள்ளிச் சாமான்கள், தங்க நகைகள், பணம், கொண்டுவந்து குவித்தனர் மக்கள். அவைகளை வைத்திருக்கப் போதுமான இடம்கூட இல்லையாம். அளவு அவ்வளவு, ஆர்வம் அத்துணை! கிழமைக்கு ஒரு நாள், உணவருந்தலாகாது, அதனால் மிச்சப்படும் பணத்தைச் சேர்த்து, மாமன்றத்திடம் தரவேண்டும் என்றுகூட மாமன்றத்தார் ஒரு ஏற்பாடு செய்தனராம். போர்ச்செலவுக்கான பணம் குவிந்தது மட்டுமல்ல, ஒரு உயரிய கொள்கைக்காகப் போரிடுகிறோம், உயிர் இழப்பினும்