உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

கவலையில்லை, என்ற தூய எண்ணம்‌; வீரம்‌, ததும்பும் மக்கள்‌ குவிந்தனர்‌.

இலண்டன்‌ வியாபாரக்‌ கோட்டம்‌—மாமன்றத்துக்குப்‌ பெருந்துணையாக நின்றது.

கடற்படை பெரிதும்‌ மாமன்றத்தை ஆதரித்தது.

துறைமுகப்பட்டினங்கள்‌ பலவும்‌ மாமன்றச்‌ சார்பில்‌ இருந்தன.

எனவே வெளிநாடுகளிலிருந்து ஆள்‌ அம்பு, மன்னனுக்காக வரவழைப்பது கடினமான காரியமாகிவிட்டது.

பிரபுக்கள்‌ புடைசூழ நின்ற மன்னனிடமும்‌, பணம்‌ திரண்டது, படையும்‌ அமைந்தது. ஆனால்‌ கொள்கை மட்டுமே தரவல்ல நெஞ்சுஉரம்‌ மன்னன்‌ படை வரிசையில்‌ இல்லை. ரூபர்ட்‌ என்பவர்‌ போன்ற திறமிகு தளபதிகள்‌ இருந்தனர்‌. எனினும்‌ படைவீரரிடம்‌ ஆர்வம்‌ இல்லை.

1642-ம்‌ ஆண்டு துவங்கிய உள்நாட்டுப் போர், 1645—வரையில்‌ நடைபெற்றது. பயங்கரமான சண்டைகள்‌. இருதரப்பிலும்‌ கொட்டப்பட்ட இரத்தம்‌ கொஞ்சமல்ல! வீரச்‌ செயல்களுக்கும்‌ குறைவில்லை. இருதரப்புக்‌கும்‌ வெற்றி தோல்வியின்றிச்‌ சிலகாலம்‌ நடைபெற்ற சமர்‌ மாமன்றப்‌ படைவரிசையிலே பணியாற்றிய மாவீரன்‌ ஆலிவர்கிராம்வெல்‌ என்பவரின்‌ திறமையாலும்‌ தீரச்‌ செயலாலும்‌, களம்‌ அமைக்கும்‌ முறையாலும்‌, தாக்குதலை வகுத்திடும்‌ திட்டத்தின்‌ நேர்த்தியாலும்‌, மாமன்றத்துக்‌குச்‌ சாதகமாகத்‌ திரும்பிற்று. மார்ஸ்டன்‌ மூர்‌, நியூபரி, நேஸ்பி, எனும்‌ இடங்களில்‌, மாமன்றத்துக்கு மகத்தான வெற்றிகள்‌ கிடைத்தன. கிராம்வெலின்‌ கீர்த்தி பரவிற்று மன்னன்‌ படை வரிசையில்‌ பிளவும்‌, போரிடுவோர் உள்ளத்தில்‌ கிலியும்‌ ஏற்பட்டது.