113
வெற்றி கேட்டு மகிழ்ந்த மக்கள், மனவேதனை கொள்ளும் சம்பவமும் இதுபோது நடைபெற்றது. 1643-ல் ஹாம்டன், தீரமாகக் களத்தில் போரிட்டு கொண்டிருக்கையில், இறந்து விட்டார்! வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகப் பாடுபட்ட மாவீரன் மறைவு, நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத பெரு நஷ்டம் எனினும், வரலாற்றுச் சுவடியில் மட்டுமல்லாமல், மக்கள் உள்ளத்திலே இடம்பெற்று, ஹாம்டன் நிலைத்து நின்றார். மாமன்றம் இறுதியில் வாகைசூடும், மக்களின் சக்தியை இனி மன்னன் மாய்த்திடுவது முடியாத காரியம் என்பதற்கான நல்ல குறிகளைக் கண்டானபிறகே ஹாம்டன் மாண்டார். அவர் ஆற்றிய பணி அளப்பரிது. அவர் காட்டிய வீரம் மக்களை ஈர்த்தது. மாவீரன் மறைந்தான், கடைசி சொட்டு இரத்தத்தையும், மக்கள் பணிக்கே தந்தான்.
மக்களுக்கு மகிழ்ச்சியும் மன்னன் சார்பினருக்கு, மருட்சியும் தரத்தக்க மற்றோர் சம்பவம் இதுபோது நிகழ்ந்தது. நாட்டை அடக்கி ஆண்ட அக்ரமக்காரரில் ஒருவனான லாட் தூக்கிலிடப்பட்டான்.
மக்களை துக்கத்திலாழ்த்திய மற்றோர் சம்பவம் பிம் மரணம். ஹாம்டன் போலவே, முன்னணி நின்று மக்கள் பணியாற்றிய பிம், விடுதலை விளக்கை ஏற்றிவைத்தான். ஆனால் அதன் முழு ஒளியைக் காணும்முன்னம், இறந்துபட்டான். ஓயாத உழைப்பு உடலைத் துளைத்துவிட்டது. நோய்வாய்ப்பட்டு, பிம் இறந்தான், இறவாப் புகழ் பெற்றான பிறகு, மக்கள் பணிக்காகத் தன்னை ஒப்படைத்த பிறகு இம்மாவீரன், சுகமிழந்தான், சொத்திழந்தான், ஓய்விழந்தான், ஓட்டாண்டியுமானான். மக்கள் உரிமை பெறவேண்டும் என்பதன்றி வேறோர் குறிக்கோள் கொண்டானில்லை. நுண்ணறிவும், பொங்கும் ஆர்-