114
வமும், பொல்லாங்கைப் பொசுக்கும் தீரமும் படைத்த பிம், கடைசிக் காலம் வரையில், மக்களுக்காகவே உழைத்தான் — வெற்றி கிட்டுவது உறுதி என்ற நிலை பிறந்த பிறகே மறைந்தான்; மறைவதற்கு முன்புகூட, மக்களுக்கு மகத்தானதோர் நலன் தந்தான்.
எட்வர்டுவாலர் என்றோர் கவிஞன் — கலை உள்ளம் கொள்ளவேண்டியவன், சதிச்செயலில் ஈடுபட்டான்.
இனிக்கப் பேசுவான், எவரிடமும் சாதகமாகப் பழகுவான், தோழமைகொள்வான். இக்கவிஞன் மன்னனுக்காக ‘சதி’ புரியத் திட்டம் வகுத்தான்.
தித்தித்கும் பேச்சில் வல்ல இவனிடம் ஆடவரும் பெண்டிரும் நேசம் கொண்டனர், படை வரிசையில் பிளவு உண்டாக்குவது, மாமன்றத்தின் வலுவைக் குலைப்பது, மன்னனை அரியாசனம் அமர்த்துவது என்பது கவிஞன் திட்டம். ஆஸ்தானக் கவிஞன் ஆகலாம் என்று கனவு கண்டிருப்பான் போலும்!
டாம்கின்ஸ், என்பான் வாலருக்கு உறவினன். தன் கற்பனைமிக்க கவிதைகளைப் பாடிக் காட்டவேண்டிய கவிஞன், தன் சதித்திட்டத்தை அவனிடம் கூறினான், அவன் ஆதரவு பெற.
மாமன்றத்தின், சம்பளமில்லாத ஒற்றர்கள் எல்லா மாளிகையிலும் இருந்தனர், டாம்கின்ஸ் மாளிகையிலும்!!
சதித்திட்டம் பேசப்படுவதைக் கேட்டுக்கொண்டிருந்த பணியாள், சேதியைப் பிம்முக்கு அறிவித்தான்–மாமன்றத்தார் பாய்ந்தனர், காதகர் சிக்கினர், பத்தாயிரம் பவுன் அபராதம் செலுத்தி, கவிஞன் உயிர் பிழைத்துக் கொண்டான்; சிலர் கொல்லப்பட்டனர்; சதி சிதைக்கப்பட்டது.
மறையுமுன் பிம் ஆற்றிய தொண்டு இது.