116
நாடு, பெரும் போரிலே சிக்கிற்று—பொருள் சேதம், உயிர்ச்சேதம் ஏராளம்—வரிச்சுமையும்—அதிகம் இந்நிலையில், மாமன்றத்தின் பக்கம் நிற்பவர்கள்கூட, சிறிது சலிப்படைந்திருக்கக் கூடும். இந்த நிலைமையைத் தனக்கேன் வாய்ப்பாக்கிக் கொள்ளக்கூடாது என்பது மன்னன் கருத்து.
சிறைப்பட்டது முதல் சிரம் இழக்கும் வரையில், மன்னன், தப்பிச்சென்று தன் ஆதிக்கத்தைத் திரும்பப் பெற எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முக்கியமான முறை ஒன்று இருந்தது—தன்னை எதிர்த்து நிற்கும் அணியில் பிளவு ஏற்படவேண்டும் என்பதுதான் அம்முறை.
ஸ்காத்லாந்துக்காரரை அடுத்து அவர்களின் ஆதரவைப் பெற்றால், அவர்கள் மூலம், பிரிட்டிஷ் மக்களை வீழ்த்தலாம்.
அயர் மக்கள் திரண்டால், அவர்களைக் கொண்டு மாமன்றத்தாரை ஒழிக்கலாம்.
மாமன்றத்திலேயே, பிரிவு தெரிகிறது, அதைப் பயன்படுத்தினால், பலன் காணலாம்.
மாமன்றத்துக்கும் படையினருக்கும் பிளவு வெடிக்கிறது, இதனைப் பயன்படுத்தலாம்.
இன்னபிற எண்ணங்களே மன்னன் மனதில்! தத்துவம் குடைகிறது, என்செய்வான்!
ஸ்காத்லாந்துக்காரர், மன்னனை மீண்டும் ஆதிக்கம் செலுத்தத் துணைபுரிய விரும்பவில்லை; மன்னன் கிடைத்திருக்கிறான், இவனைக் காட்டி மாமன்றத்திடம் பெரும் பொருள் பெறவேண்டும் என்று எண்ணினர்;
400,000 பவுன்தர மாமன்றம் இசைந்தது, மன்னனை ஒப்படைக்க ஸ்காத்லாந்துக்காரர் இணங்கினர்.
மன்னன் முறியடிக்கப்பட்ட நேஸ்பீ, களத்தருகே,