உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

“அவன்விட்ட வழிப்படி நடக்கட்டும்‌!” என்பது, இருவருக்கும்‌ எப்போதும்‌ எண்ணம்‌.

‘வெற்றி தருபவன்‌ அவனே! வேந்தனை நம்மிடம்‌ ஒப்படைத்தவனும்‌ அவனே!’ என்று பக்தி மேலிட்டுத்‌தான்‌ கிராம்வெல்‌ பேசுவான்‌. களத்திலிருந்து அவன் வெற்றிச்‌ செய்திகளை அனுப்பிய ஓலைகள்‌ முதற்கொண்டு துணைவிக்கு அனுப்பிய காதல்‌ கடிதம்‌ வரையில்‌, இந்த “பக்தி” ததும்பிற்று.

சார்லசும்‌, எந்தக்‌ கஷ்டம்‌ நேரிடுகிறபோதும்‌, எந்தக்‌ கொடுமை செய்கிற சமயத்திலும்‌, “அவன்‌” பெயர்‌ கூறத்‌ தவறியதில்லை.

எனவே, “அவன்‌” அருள்‌ பெற்ற அவ்விருவரும்‌ தான்‌, ஒருவருக்கொருவர்‌ கணக்குத்‌ தீர்த்துக்கொள்ள வேண்டியது, பொருத்தம்‌!

பொருத்தம்‌ இருப்பினும்‌ இல்லாது போயினும் நிலைமை கிராம்வெல்‌ பக்கம்‌ இருந்தது.

மாமன்றத்தில்‌, முணுமுணுத்தவர்களை, விரட்டினான்‌—முன்னின்று காரியமாற்றும்‌ நிலை பெற்றான்‌.

மாமன்றத்துக்கும்‌ படையினருக்கும்‌ ஏற்பட்ட இந்தப்பிளவு, மன்னனுக்கு வாய்ப்பாகிவிடாமலிருக்க, இருசாராரும்‌, தனித்தனியே மன்னனிடம்‌ சமரசம்‌ செய்து கொள்ள முயற்சித்தனர்‌. மன்னனோ, ‘இதைக்‌ காட்டி அதை’ ஏய்க்கும்‌ போக்கில்‌ ஈடுபட்டான்‌.

படையினர்‌, மன்னனைத்‌ தங்கள்‌ வசம்‌ கொண்டு வந்து வைத்துக்கொள்வதுதான்‌ நலன்‌ பயக்கும்‌ என்றனர்‌; எனவே மாமன்றத்தாரிடம்‌ சிறைப்பட்டிருந்த மன்னனைத்‌ தங்கள்‌ மேற்பார்வையில்‌ உள்ள சிறைக்குக்‌ கொண்டுவரத்‌ திட்டம்‌ தயாராயிற்று. மன்னன்‌ இப்போது சிறை எடுக்கப்பட வேண்டிய பொருளானான்‌!