உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

மன்னருக்காகப்‌ போரிட வருக!”

முரசறைகிறான்‌ காப்டன்‌ பர்லி என்பான்‌ வெளிப்படையாகவே!

மன்னனோ மாமன்றப்‌ படையிடம்‌ தோற்றோடினான்‌—சரண்‌ புகுந்தான்‌ — சிறைப்படுத்தப்பட்டிருக்கிறான்‌. எனினும்‌, மன்னனுக்காகப்‌ போரிடக்கிளம்புக என்‌று முரசு அறைகிறான்‌.

மக்கள்‌ முரசு கேட்டனர்‌, கேலி பேசினர்‌.

பெண்கள்‌ சிலரும்‌ துப்பாக்கி தூக்கி ஒருவனும்‌தான்‌ இந்த அறப்போருக்குக்‌ கிளம்பினர்‌! மன்னனுக்கு இருந்து ஆதரவுக்குத்‌ தக்க எடுத்துக்காட்டு!

கலாம்‌ விளைவித்தவன்‌ கூண்டில்‌ தள்ளப்பட்டான்‌.

பதினொரு திங்கள்‌ இங்கு இருந்தான்‌ மன்னன்‌—மனதிலே, மக்களை மகிழ்விக்கத்தக்க எந்த முடிவும்‌ கொள்ளவில்லை. இப்பக்கமும்‌ அப்பக்கமும் பார்த்த வண்‌ணம்‌, தப்பி ஓடத்‌ துணைதேட.

கலம்‌ கடலில்‌ தயாராக இருக்கிறது! கடற்கரை போகக்‌ குதிரையும்‌ தயாராகிவிட்டது! ஆட்கள்‌ வந்துவிட்டனர்‌, துணை நிற்க.

மாளிகை மாடியிலிருந்து, பலகணி வழியாகக்‌ கயிறு கட்டி மன்னன்‌ கீழே இறங்கி, தப்பிச்‌ செல்வதென்று திட்‌டம்‌. இதனை பயர்பிரேஸ்‌ என்பவன்‌ வகுத்துத்தந்தான். பலகணியின்‌ இரும்புக்‌ கம்பிகளின்‌ இடுக்கிலே புகுந்து செல்ல மன்னன்‌ முயற்சித்தான்‌–தலை நுழைந்தது, உடல்‌ சிக்கிக்கொண்டது, உடன்‌ இருந்தோர்‌ காப்பாற்றினர்‌, தப்ப முடியவில்லை.

இலண்டன்‌ நகர்‌ சென்று இரும்பைத்‌ துளைக்கும்‌ கருவி கொண்டுவர ஏற்பாடாயிற்று.

இரகசியம்‌ வெளியாகிவிட்டது, காவல்‌ பலமாகி