125
விட்டது. மன்னனோ தியானம்—தொழுகை, தவறாமல் செய்த வண்ணம் இருக்கிறான்.
எத்தன் ஒருவனுடைய துணைகொண்டு, ஜேன் ஹோர்வுட் எனும் மாது, மன்னன் தப்பிச்செல்ல வழி கண்டாள். இரகசியக் கடிதங்கள் பல மன்னனிடமிருந்து ஜேன் பெற்றாள். இந்தச் சதியும் அம்பலமாகிவிட்டது—தப்பிச் செல்லும் வழி அடைக்கப்பட்டுவிட்டது.
“மன்னவா! விடைபெற்றுக்கொள்ளட்டுமா! தாங்கள் இங்கிருந்து சென்றுவிடத் திட்டமிட்டிருக்கிறீராமே!” என்று கேலிபேசி, எச்சரித்தான், கோட்டைக் கவர்னர்.
மன்னன் சீறவில்லையாம், சிரித்தானாம்!
மாறுவேடம் புனைந்துகொள்வது, மறைந்திருப்பது, காட்டு வழிகளைக் கண்டறிவது, பலகணிக் கம்பிகளை அகற்றுவது, போன்ற சாகசச் செயலெல்லாம், மன்னன் செய்துபார்த்தான். திறமையை இந்தத் துறைக்கே செலவிட்டானே தவிர, காலத்தின் குறியை அறிந்து, மக்களிடம் தோழமைகொள்வோம் என்ற எண்ணத்தைப் பெற்றானில்லை.
கரம் எக்காரணத்தாலோ வலுவடைந்துவிட்டது. அதனாலேயே, நாம் இவர்களிடம் சிக்கிவிட்டோம், அவர்கள் தம் வலுவை இழந்துவிடுவர், விரைவிலில்லாவிட்டாலும் சிலகாலம் சென்றான பிறகு, அப்போது மீண்டும் தர்பார் நடத்த இயலும், புரட்சிக்காரரைப் பொசுக்கிவிடலாம் என்று பகற்கனவு கண்டபடி இருந்தான் மன்னன். கருத்து, சதித்திட்டம், சாகசம் இவற்றிலேயே படிந்திருந்தது.
மன்னன் நிலை இவ்வாறிருக்க, மாவீரன் கிராம்வெல் ஸ்காத்லாந்துக்காரர் எதிர்ப்புரட்சி நடத்தக் கிளம்பியதை அழித்தொழித்து வெற்றிகண்டான்.
மன்னன் எந்தத் திக்கிலெல்லாம், உதவிகிடைக்கு-