உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

மென்று எண்ணிக்‌ கொண்டிருந்தானோ, அங்கெல்லாம்‌ கிராம்வெலின்‌ வெற்றி முரசும்‌ கேட்கலாயிற்று. இடிகேட்ட நாகமாயினர்‌ சதிகாரர்கள்‌. கடைசிகட்டம்‌ வந்துவிட்டது; இனி மன்னன்‌ தன்‌ ஆதிக்கத்தை மீட்டுக்கொள்வது இயலாத காரியம்‌ என்பது விளக்கமாகிவிட்டது. நாட்டுக்கு தக்கதோர்‌ ஏற்பாடு செய்யும்‌ தகுதி படைத்த தலைவன்‌ ஆலிவர்‌ கிராம்வெல்‌ என்பதை அனைவரும்‌ ஏற்றுக்‌ கொள்ளவேண்டியதாகிவிட்டது. படையிலே வீரம்‌, நிர்வாகத்‌ துறையிலே திறம்‌, பொதுவாகவே தன்னல மறுப்பு, இவைகள்‌, கிராம்வெலின்‌ அரண்களாயின.

மாமன்றத்திலே, முணுமுணுப்பாளர்கள்‌, முன்னை நினைவுகளை விட மறுப்போர்‌, ஆகியவர்கள்‌, விரட்டப்‌பட்டனர்‌ — மாமன்றம்‌ பணியாற்றவேண்டிய அளவு முடிந்துவிட்டது. இனி ஒரு பலம்‌ பொருந்திய அரசு முறை வகுத்தாகவேண்டும்‌, அந்தப்‌ பணிக்காக, கிராம்‌வெலுடன்‌ ஒத்துழைக்கக்கூடியவர்களுக்கு மட்டுமே, மாமன்றத்தில்‌ இடம்‌! ஐம்பதின்மரே, இதுபோது மாமன்ற உறுப்பினர்கள்‌.

மன்னனை என்ன செய்வது? பெரும்‌ பிரச்னையாகிவிட்டது. மறப்போம்‌, மன்னிப்போம்‌! என்று கூறிட மக்களில்‌ ஒரு பகுதியினர்‌; மற்றோர்‌ பகுதியினரோ, குறிப்பாக, படையினரோ, “மன்னன்‌ மக்கள்‌ துரோகி! ஒழித்துக்‌ கட்டத்தான்‌ வேண்டும்‌” என்று கூறினர்‌.

“அவன்‌” வழி காட்டுவான்‌ என்றான்‌ மன்னன்‌. “அவன்‌” கட்டளைப்படி நான்‌ நடந்துகொள்வேன்‌ என்றான் கிராம்வெல்‌.

பிரிட்டனில்‌, சிறையில்‌ மன்னன்‌ — சொந்த அரண்‌மனையில்தான்‌, ஆனால்‌ பல்லும்‌ நகமும்‌ போன புலி.

விசாரம்‌, வேந்தனைக்‌ கிழவனாக்கிவிட்டது — தலைமயிர்‌ நரைத்துவிட்டது—கண்ணொளி குறையலாயிற்று—