128
133 உறுப்பினர்கள். வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் கூடிய இந்த விசாரணைக் குழுவுக்கு, மன்னன் அழைத்து வரப்பட்டான்.
“நான் உங்கள் மன்னன்! என்னை விசாரிக்கும் தகுதி இந்தக் குழுவுக்குக் கிடையாது. எந்த அதிகாரத்தின் பேரில், என்னை விசாரிக்க முற்பட்டீர்கள்” என்று கேட்டான் மன்னன்.
“மக்கள் தந்த அதிகாரத்தால்!” என்று பதிலிறுத்தார் பிராட்ஷா. மன்னன்தான், மக்களுக்கு அந்தத் தகுதி கிடையாது என்ற தத்துவம் கொண்டவனாயிற்றே, விசாரணைக் குழுவின் தகுதியை ஏற்றுக்கொள்ள மறுத்தான்.
குழுவின் கேள்விகளுக்குப் பதில் தருவதில்லை; குறுக்குக் கேள்விகளும் எழுப்புவதில்லை, “என்னை விசாரிக்கும் தகுதி உங்களுக்கு இல்லை” என்றே கூறி வந்தான்—மூன்று நாட்கள்.
முடிவில், மக்கள் உரிமைகளைப் பறித்து, எதேச்சதிகார ஆட்சி நடத்தி, இறுதியாக மக்கள் மீதே போர் தொடுத்த மாபெரும் துரோகத்துக்காக, மன்னன் சார்லசைத் தூக்கிலிடுவது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
மன்னனைத் தூக்கிலிட மக்கள் தீர்ப்பளிக்கிறார்கள்! மக்கள்! வெடிமருந்துக் கிடங்கோ? பசும் புற்றரை மேலே, கீழே வெடிமருந்துக் கிடங்கு என்பதுபோல, அஞ்சி அஞ்சிச் சாகிறவர்களாக, ஆளடிமை செய்பவர்களாகத் தோற்றமளிக்கும் மக்கள், தாங்கக்கூடிய அளவு தாங்கியான பிறகு வெடிமருந்துச் சாலை போலாகிவிடுகின்றனர்—அரியாசனங்கள் ஆடுகின்றன, மணி முடிகள் சிதறுகின்றன—முடிமட்டுமா! முடிதரித்த சிரமே, இதோ வெட்டப்படுகிறது.
ஓராண்டு ஈராண்டுக்கு முன்பு கூறியிருந்தால் நம்பி