பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்கள் போக அ னு ம தி யு ங் க ள்; பெண்கள் அனைவரும் சென்ற பிறகு ஆண்கள் போக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அங்கே அமைதி நிலைநிறுத்தப்பட்டது. பெண்கள் கலவர உணர்வில்லாமல், பயமோ பரபரப்போ கொள்ளாமல், நிதானமாக வெளியேறினர்கள். அதன் பிறகே ஆண்கள் அனைவரும் சென்ருர்கள். அவர்களில் பெரும்பகுதியினர் இளைஞர்கள்தான்.

இந்தப் பண்பாட்டு உயர்வு நாடு நெடுகிலும் செயல் பட்டுக் கொண்டிருந்தது, ஒரு காலத்தில்.

'இந்திய விடுதலை, பாரத மாதாவின் விஸ்வரூபம், உலக வரலாற்றின் ஏட்டுத் திருப்பம், மானுடன் ஓங்கி தெய்வீக எல்லையைக் கிட்டும் பேரெழுச்சி, கலி மறைந்து கிருதயுகம் தோன்றும் வைகறை என்ற மனக்காட்சிகளில் மோகனக் கவர்ச்சி. ராம் மோகன் ராய், ரிஷி தயானந்த், விவேகானந்த், அரவிந்த கோஷ், திலக், ரவீந்திர நாத், காந்தியடிகள் முதலியவர்கள் கையாண்டிருந்த குறிக் கோள்கள், காட்டிய நெறிகள்,வகுத்த முறைகள்,இரும்பைக் காந்தம் இழுப்பதுபோல் இளம் மனங்களை ஈர்த்த காலம்’ என்று பெருமையுடன் குறிப்பிட்டிருக்கிருர் ஒரு சிந்தனே யாளர் ( மணிக்கொடி கே. சீனிவாசன்).

ஜவாஹர்லால் நேருவின் 'இந்திய தரிசனமும்,' சுயசரிதையும், சுபாஷ் சந்திர போஸின் இளைஞன் கனவும், ஜெயப்பிரகாஷ் நாராயணனின் எழுத்துக்களும் இந்திய இளைஞர்களுக்கு எழுச்சியூட்டி வந்தன. பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் போராட்டமும் வீர மரணமும் நாடு முழுவதிலும் இளைஞர் சமுதாயத்தின் உள்ளத்தில் உத்வேகம் புகுத்தின. அவர்களுக்கு செயல் தினவையும் உயர்ந்த கனவுகளையும் அவை தந்தன. அரிய சாதனைகள் புரிவதற்கான ஆற்றலை அவர்களுள் வளர்த்தன.

அவற்றை வளர்க்கும் விதத்திலேயே பத்திரிகைகளும் செயல்பட்டுக் கொண்டிருந்தன. மக்களின் உள்ளத்தைப் பண்படுத்தி அறிவை வளர்க்கக் கூடிய நல்ல புத்தகங்களே

11