பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. இசை உலகக் கூத்துகள்

தமிழ் நாட்டின் சிறு நகரங்களில் கூட இப்போது சகஜமாகிவிட்டது

படித்துப் பட்டம் பெற்ற இளைஞர்கள், வேலை இல்லாமல் இருக்கிற காலத்தில், உல்லாசமாக இசைப் பயிற்சியில் ஈடுபடுகிருர்கள். பணம் சேகரித்து விலை உயர்ந்த இசைக்கருவிகளை வாங்கி ஒரு குழுவாக இயங்கு கிருச்கள். ஒசைகளை எழுப்புவதிலும், நவீன பாணி மேற் கத்திய இசை என்று கூச்சலிட்டுத் தனிரகப் பாட்டுகள் பாடுவதிலும், ராக் அன் ரோல் இசை என்று உடம்பை விைப்பு கண்டவன் போல் குலுக்கி அசைத்து அதிர்வுகள் சித்திரிப்பதிலும் உற்சாகம் காண்கிருர்கள்.

கல்லுரரிகளின் சிறப்பு விழாக்களின் போதும் இத்தகைய இளைஞர்கள் மேடைமீது தோன்றி ஆடிப்பாடி அமர்க்களம் பண்ணுகிருர்கள்.

தங்கள் அறையில் தனித்து இருக்கிறபோது, தனி நபராகவோ, ஒன்றிருவர் கூடியோ, சிக்கார்டு ப்ளேயரில் மேல்நாட்டுப் புதுவகை இசைத் தட்டுகளே ஒலி எழுப்பும்படி செய்து, அதனுடன் இணைந்து பாடி, கூடவே உடம்பை தெளித்தும் குலுக்கியும், விசித்திரமாக அசைத்தும் வக்கிர காக ஆட்டியும் நடனமாடிக் களிப்பதும் இன்றைய இளைஞர் களின் பொழுது போக்காகி விட்டது.

மேலேக் கலாசாரத்தின் வவிய பாதிப்புகளில் ராக் அன் ரோல் இசை மோகமும் முக்கியமானது ஆகும்.

5 §