பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாரியுவான மணம் க வ த் தி ரு ந் தது. விநோதமான வெண்ணிறப் பொடி நாசித் துவாரங்களினுள்ளே படிந்தது. இருபத்தையாயிரம் பேர் வசியமுற்றவர்களாய் அந்த மேடை மீதே பார்வை பதித்துக் காத்திருக்கிருர்கள். உதடுகளும் நாக்கும் ஆடி அசைவது போல் தோன்றுகிறது.

திடீரென்று மறைவிடத்திலிருந்து ஒரு அறிவிப்பு ஒலி வெடிக்கிறது: சீமாட்டிகளே சீமான்களே. இதோ ரோலிங் ஸ்டோன்ஸ். பயங்கரமான புகழ்ச்சி ஆரவாரம் இரவின் அமைதியை சிதறடிக்கிறது. இருபத்தையாயிரம் குரல்கள் உணர்ச்சி வெறியின் விளம்பில் அதிர்கின்றன. ஸ்டோன்கள் இருட்டிலிருந்து பேய் உருவங்களென வெளிப்படுகிரு.ர்கள். முக்கிய நபர் மைக்கின் முன்னே பாய்ந்து செல்கிருன். 'ஹல்லோ ஸான்பிரான்சிஸ்கோ, இங்கே வந்திருப்பது சுகமாக இருக்கிறது என்று மிக் ஜாகர் உரக்கக் கத்து கிருன். அவனுடைய குரல் பாதி இங்கிலீஷ் பிரபுத் தனமாகவும் பாதி யூதவட்டாரக் குழந்தைப் பாங்கிலும் ஒலிக்கிறது. மீண்டும் அந்தப் பயங்கரப் புகழ்ச்சி ஆரவாரம். ஜாகர் தலையைத் திருப்பி கீத் ரிச்சார்டைப் பார்த்துச் சிரிக்கிருன். 'வா, வா: ரிச்சார்டின் பெருவிரல் வாத்தியத் தின் தந்திகளில் ஒன்றை மீட்டுகிறது. உலகிலேயே மிகப் பெரிய ராக் அன் ரோல் பாண்டு வாத்தியம் எதிரேயிருந்த பெரும் கும்பலை நோக்கி ஒரு உணர்வலையை அனுப்புகிறது. ஒரு கணத்துக்கு எல்லோரும் கல்லாகிப் போகிருர்கள். ஜாகர், கும்பலுக்கு நேர் எதிராகத் தன் இடுப்பைத் துருத்தி ஆட்டியபடி முன்ளுேக்கி ஓடுகிருன், மேடை ஒரத்தில் சுற்றித் திரிகிருன். அப்போது கீழேயிருந்து பெண்கள் ஆவன தொட முயல்கிருர்கள்.

ஸ்டோன்கள் பாடல் பின் பாடலாக முழக்குகிரு.ர்கள். அவை: வெறிவேகத்தோடு அவர்களூடாகப் பரவிச் செல்கின்றன. இதற்குள் ஜாகர் அணிந்துள்ள கால் சட்டையின் விப் தளர்ந்து கீழே இறங்கிவிடுகிறது. அவனது ரோமம் இல்லாத இடுப்புப் பகுதியையும் அடிவயிற்றுக்குக்

LD・学・&一会 53