பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலசுருகப் பிரித்த மார்க்கெட் பகுதிகள்; பல பெயர் களிட்ட ஒரே போதைப் பொருள்கள்; அவற்றைப் பரப்பு வதற்கு போட்டிகள், விளையாட்டுகள்,விளம்பர தந்திரங்கள் -இவை வியாபார நடைமுறைகள் ஆகியுள்ளன.

1981-ல் போதைப் பொருள்களின் விற்பனைக்காக உலகெங்கும் விளம்பரம் செய்வதற்கு மட்டும் 269 கோடி டாலர் செலவிடப்பட்டிருக்கிறது.

பெண்களிடையே போதைப் பொருள்களைப் பழக்கப் படுத்துவதற்காக, சரக்குகளின் பழைய பெயர்களே மாற்றி புதிய பிராண்ட் பெயர்களைத் தருவது; புட்டிகளின் உருவத்தில் வசீகர மாறுதல்கள் ஏற்படுத்துவது ஏராள மான விளம்பரங்கள் செய்வது முதலிய வழிவகைகளைக் கையாள்கிரு.ர்கள். இவற்றின் மூலம் போதைப் பொருள் களின் நுகர்ச்சி அதிகரித்துள்ளது.

பெண்கள் குடி மற்றும் போதைப் பொருள்களே பயன் படுத்துவதால் பல புதிய பிரச்சினைகள் சமுதாயத்தில் பல துறைகளில் தலைகாட்டியுள்ளன.

பத்திரிகைகள், சினிமாபோன்ற பொதுஜனப் பொழுது போக்கு சாதனங்கள் இத்தகைய விளம்பரங்களுக்கு வெகு வாகப் பயன்படுத்தப்படுகின்றன.

அமெரிக்காவில் இந்தவிதமான தொடர் விளம்பரங்கள் அலைகள்போல் தோன்றிப் பெருகுகின்றன. அங்கே குடி மற்றும் போதைப் பொருள்களின் பழக்கத்தின் அவலட் சணங்கள் அதிகமாகப் புலனுகின்றன.

விளம்பரங்களில் பலவகைப் புதுமைகளும் கையாளப் படுகின்றன. இலவச மாதிரிகள், ஆதரவாளர் கிளப்புகள், ஒரு குறிப்பிட்ட பெயர் சின்னத்தை பரவலாக, வசீகரமாக, திரும்பத் திரும்ப விளம்பரம் செய்தல் போன்ற முறை களால் விற்பனைப் பெருக்கத்துக்கு வழி செய்கிருர்கள் உற்பத்தியாளர்கள்,

இ !