பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனவே அவர்கள் நம்பிக்கை வறட்சியும் வெறுப்பும் கொண்டு குமைகிருர்கள். எந்த விதத்திலாவது தங்கள் எதிர்ப்பைக் காட்ட அவர்கள் துடிக்கிரு.ர்கள். ஹிப்பித் தனமான போக்கு அவர்களுக்கு புரட்சிகரமானதாகத் தெரிகிறது. சுதந்திர வாழ்க்கையாகப்படுகிறது. அனைத் துக்குமான எதிர்ப்பை வெளிப்படையாகக் காட்ட வசதி செய்கிற தனி வழியாகத் தென்படுகிறது.

தலைமயிரை தாறுமாருக வளர்த்துக்கொள்கிருர்கள். தாடியை வளர விடுகிரு.ர்கள். ஆடை அணிகளில் கோணல் தனங்களையும் அலட்சியத் தன்மையையும் காட்டுகிருர்கள். கண்ட கண்ட உணவுவகைகளைத் தின்கிருர்கள், பணத்தை அலட்சியமாகக் கருதுகிரு.ர்கள். பணம் இல்லாதபோது, கஞ்சா பொதித்த பீடியைப் புகைத்தபடி பட்டினி கிடக்கவும் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்கிரு.ர்கள். நாடோடிகளாகிக் கண்டபடி திரிகிரு.ர்கள். ஆண்களும் பெண்களும் கூடி இஷ்டம்போல் கட்டுப்பாடற்ற வாழ்வு வாழ்கிருர்கள், கும்பல் கும்பலாகச் சேர்ந்து கூத்தடிக் கிளுர்கள். போதைப் பொருள்களை தாராளமாக உபயோகப் படுத்துகிரு.ர்கள்.

மேலே நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த இந்த ரக சர்வசுதந்திரவாதிகளின் போக்குகள் இங்கே உள்ள இளைஞர் களேயும் வசீகரித்தன. சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் ஸ்தாபன அமைப்புகளுக்கும், வீட்டுக்கும் சம்பிரதாயங்களுக்கும் அடங்கி, அமைதியான வாழ்க்கை முறையைப் பின்பற்று கிறவர்களே ஹிப்பிகள் ஸ்குவேர்கள்’ என்று பரிகசித்தார்கள்.

அப்படி ஸ்குவேர்களாக வாழ விரும்பாத இளைஞர்கள் -ஆண்களும் பெண்களும்-இந்த நாட்டிலும் உண்டு என்று காட்டிக்கொள்ளப் பலப்பலர் முன் வந்தார்கள். t

கோவா இவர்களது சொர்க்கம் ஆயிற்று. அதன் அழகிய கடற்கரை இவர்களுக்கு மகிழ்ச்சி தரும் பிருந்தா வனம் ஆகிவிட்டது.

64