பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதி மனிதன் (சூப்பர்மேன்) ஆக விளங்குகிற சூராதிசூரன் శ్రీః శ} சூழ்ச்சிகளையும் முறியடித்து, உண்மையான குற்றவாளிகளே அம்பலப்படுத்துவதாக சித்திரிக்கப்படுகிருன்.

அப்படியே, அரசாங்கத்துக்கு எதிராக சதிசெய்து, அமைதி வாழ்வைக் கெடுத்து, நாட்டுக்குத்தீமை விளைவிக்கிற சதிகாரர்கள் சோஷலிச சக்திகளே சேர்ந்தவர்களாகக் காட்டப்படுகிரு:ர்கள் .

காமிக்ஸ் கதாநாயகனை அசகாய சூரன் சிவப்பு உளவாளிகளைக் கண்டு பிடித்து அவர்களது திட்டங்கள் வெற்றி பெருது செய்துவிடுவான். மக்களின் வாழ்க்கையில் அமைதி இல்லாது செய்கிற கதுப்புக் குற்றவாளி களத் தோற்கடித்து, தனது வீரப்பிரதாபத்தை நிலைநிறுத்துவான்.

இந்த விதமாக, எதார்த்த நிலைகளுக்கு மாறுபட்ட விஷயங்களை வலியுறுத்தி, பத்திரிகை படிப்பவர்கள்- படம் பார்க்கிறவர்களது மனசை திசை திருப்புவதற்கான முயற்சி களில், முதலாளித்துவக் கலாசார நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. மேலைநாட்டு முதலாளித்துவப் போக்குகளைப் பின்பற்றி இந்த நாட்டு வணிக நோக்கு முதலாளித்துவ நிறுவனங்களும் அப்படிப்பட்ட முயற்சி களில் உற்சாகம் காட்டுகின்றன.

டெலிவிஷன், சினிமா, ரேடியோ, பத்திரிகைகள், புத்தகங்கள் முதலிய தகவல் சாதனங்கள் அந்த அந்த நாடுகளில் உள்ள மக்கள் அவரவர் சமூக வாழ்வைப் பற்றி தன்ருகத் தெரிந்து கொள்வதற்கும், வெளிநாடுகளில் வாழும் மக்களின் வாழ்வைப் பற்றிய செய்திகளே அறிந்து கொள்வதற்கும், அவர்களுடைய அறிவையும் சிந்தனையையும் வளர்ப்பதற்கும், அவர்களை ஆன்மிக ரீதியாக வளப்படுத்து வதற்கும் உதவ முடியும்; உதவ வேண்டும்.

சோவியத் யூனியன், சோஷலிச நாடுகள், மற்துமுள்ள வளரும் நாடுகளிலும் இவ்வகையில்தான் அவை பயன் படுத்தப்படுகின்றன. அம் முயற்சிகளை வெற்றி பெருமல்

73