பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. முதலாளித்துவத்தின் அவலங்கள்

"இன்று உலகில் இரண்டு சமூக அமைப்புகள் உள்ளன. முதலாளித்துவம், சோஷலிசம் ஆகியவையே அவை. மனித மனங்களே வெல்வதற்காக இந்த இரு உலக சமூக அமைப்பு களுக்கிடையேயும் பல பத்தாண்டுகளாகவே போராட்டம் தடைபெற்று வருகிறது. மனித முயற்சியின் கிட்டத்தட்ட எல்லாத் துறைகளுக்கும் அது வியாபித்துள்ளது. இப்போது இந்த சித்தாந்தப் போராட்டம் என்றுமில்லாதபடி உக்கிரம் அ ைட ந் து ஸ் ளது. அது மட்டுமல்ல. இதனை ஒரு "மகுேதத்துவப் போர் முறையாக மாற்றுவதற்கும் முதலாளித்துவ உலகின் பிற்போக்கான வட்டாரங்கள் மூர்க்கத்தனமாக முயற்சி செய்து வருகின்றன.”

இவ்வாறு குறிப்பிடுகிருர் வி. வி. கக்கிலாயா, குற்றவாளிக் கூண்டில் முதலாளித்துவம்’ என்ற நூலில்.

இன்றைய உலக நிலையை உள்ளது உள்ளபடி சொல்கிற கூற்று ஆகும் இது.

தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக முதலாளித்துவ சக்திகள் பவ்வேறு பிரசார சாதனங்களையும் தீவிரமாகப் பயன்படுத்தி வருகின்றன.

முதலாளித்துவ சக்திகள் தங்களை வளர்த்துக் கொள் வதற்காக ஈவு இரக்கமின்றி மனித குலத்தை சுரண்டுவதி லேயே மும்மரமாக ஈடுபட்டுள்ளன. முதலாளித்துவ நாடுகள் ஜனநாயகம் என்று சொல்லிக் கொண்டு எண்ணற்ற

8 0