பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. பிரசார சாதனங்கள்

இன்றையத் தலைமுறையினருக்கு ரேடியோ டெலிவிஷன் வீடியோ போன்ற தகவல் சாதனங்கள் எளிதில் கிடைக்கும் வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன.

கடந்த காலத்தில் தகவல் போக்குவரத்து மிக மிக மெதுவாகவே நடைபெற்று வந்தது. வளர்ந்து கொண்டி ருந்த முதலாளி வர்க்கத்துக்கு, அதன் பொருளாதார நடவடிக்கைகளே மேற்கொள்வதற்கு மிக விரைவான செய்திப் போக்குவரத்து சாதனங்கள் தேவைப்பட்டன.

விஞ்ஞான, தொழில்நுட்பத் துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் அவர்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்குப் பெரிதும் உதவியது. பொதுவாக உலகநிலையில்-விசேஷ மாக ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும்-அரசியல் நடவடிக்கைகளும் கலாசார வளர்ச்சியும் வெகுவாக அதிகரிப் பதற்கு அது துணை புரிந்தது. அத்துடன், சர்வதேச உறவுகள் விரிவடைவதற்கும் வசதிகள் ஏற்பட்டன.

வரலாற்று ரீதியில் பார்க்கிறபோது, வெகுஜன தகவல் சாதனங்கள் இரண்டு முக்கிய நோக்கங்களுக்காகவே பயன் படுத்தப்படுகின்றன என்று தெரிய வருகிறது. முதலாவதாக உலக சோஷலிசம் மற்றும் முற்போக்கு சித்தாந்தத்துக்கு எதிராகப் பெரும் அளவில் வலுவான போராட்டம் நடத்துவது. இரண்டாவதாக, வளர்ந்து வருகிற நாடுகளில் முற்போக்கான, புரட்சிகர மாறுதல்கள் நடைமுறைக்கு வராமல் தடுத்து நிறுத்துவது ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளை ஏகாதிபத்திய ஆளுகைக்குள் அடிமைப்

87