பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவை, பொது மக்களின் அரசியல் நடவடிக்கைகள், உழைப்புப் பங்கீடு போன்ற முதலாளித்துவ அமைப்புக்கே உரிய சமூக, பொருளாதார, அரசியல் போக்குகள் வெகு ஜனத் தகவல் சாதனங்களின் தொடர்ந்த வளர்ச்சிக்கும் வகை செய்து கொண்டிருக்கின்றன.

ஆரம்பம் முதலே, அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் முதலாளி வர்க்கத்தின் உடமையாகத் தான் இருந்து வருகின்றன. முதலாளி வர்க்கத்தின் ஆளுகையில், செய்திகளை சேகரித்தல், அவற்றைக் கையாளுதல், தகவல் களேப் பரப்புதல் போன்ற அனைத்தும், இதர பல நோக்கங் களுடன், லாபம் ஈட்ட உதவுகிற வழிகளில் ஒன்ருகவே செயலாற்றுகின்றன.

தகவல் போக்குவரத்துத் துறைகளில் கடந்த பல ஆண்டு களில் ஏற்பட்டிருக்கிற விஞ்ஞான, தொழில் துட்ப முன்னேற். றத்தை, சமூக அரசியல் கலாசாரத் துறைகளில் நடை பெற்றுள்ள முக்கியமான உலக நிகழ்ச்சிகளின் பின்னணியில் சிந்திக்க வேண்டியது அவசியம் ஆகும்.

உலக மகா யுத்தத்திற்குப் பிந்திய ஆண்டுகளில் உலக சோஷலிச அமைப்பு நிறுவப்பட்டது. சோவியத் யூனியனின் சக்தியும் செல்வாக்கும் மேலோங்கின. காலனி ஆதிக்க அமைப்பு வீழ்ச்சியுற்றது. புதிய சுதந்திர அரசுகள்தோன்றின. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் தேசிய கலாசார மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. அணு சக்தி மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. விண்வெளி ஆராய்ச்சியில் வெற்றி கரமாக சாதனைகள் தொடர்ந்து புரியப்படுகின்றன. மின்ன ணுவியல் துறை வளர்ச்சி பெற்றுள்ளது. பெரும் இன்னல் களுக்கிடையிலும், பல்வேறு நாடுகளுக்கு இடையேயுள்ள வர்த்தக, பொருளாதார, விஞ்ஞான, கலாசார உறவுகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

அதே சமயம் சர்வதேச அரங்கில் சித்தாந்த, அரசியல் போராட்டம் மிகவும் கூர்மை அடைந்துள்ளது. இந்தச்

發發