பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் குழு ஒப்பந்தம் 99 தூய்மையாய் இருக்கின்றனவா என நாவுக்கரசர் தெருத் தோறும் சென்று கவனிக்கும் பொருளில், அவரது சிலையை அணிபெறச் செய்து தெருக்களில் ஊர்வலம் வரச் செய்வார் களாம். அதற்கு ஏற்றாற்போல், தெருக்களை முன்கூட்டித் தூய்மை செய்து வைத்திருப்பார்களாம். இந்தத் தூய்மை, நாட்டில் எல்லா ஊர்களிலும் எல்லாத் தெருக்களிலும் எல்லா நாட்களிலும் செய்யப்படு மாயின், எவ்வளவோ அழகாக-நாகரிகமாக இருக்கும். மீண்டும் இவ்விழா இப்போது ஊர்தோறும் நடைபெறுவது நல்லது. நம் மக்கள் தூய்மையாக வைத்திருப்பார்களா? புதுச்சேரியில் நாராயணசாமி என்னும் பெரியார் ஒருவர் இருந்தார். அவர் இளமையில் பிரான்சு நாட்டில் ஒர் ஊரில் படித்துக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த செய்தி ஒன்றை என்னிடம் தெரிவித்தார். அதாவது: “கல்விக்கூடம் செல்வதற்காக நான் வீட்டிலிருந்து வெளியே தெருவுக்கு வந்தேன். அப்போது அஞ்சல்காரர் (தபால்காரர்) ஒர் அஞ்சல் உறையை என்னிடம் தந்தார். உறையைப் பிரிப்பதற்காக நான் உறையின் நுனிப்பகுதி யைச் சிறிது கிழித்துக் கீழே போட்டேன். அப்போது பின்னால் வந்துகொண்டிருந்த பிரஞ்சுப் பெண்மணி ஒருவர் என்னை நோக்கி, 'இது போல் கீழே போடக் கூடாது; அதோ உள்ள குப்பைத் தொட்டியில் கொண்டு போய்ப் போட வேண்டும்’ என்று கூறி அந்த அம்மையாரே எடுத்துக் கொண்டுபோய்ப் போட்டார்' என்று கூறினார். நம் நாட்டில் இந்த நிலை இன்னும் எத்தனை ஆண்டு கள் கழித்து வருமோ தெரியவில்லை. ஏதோ சுற்றுப்புறச் சூழல்-சுற்றுப்புறத் தூய்மை என ஆரவாரமாக இப்போது பேசப்படுகிறது. இது முழு அளவில் வெற்றிபெற வேண்டுமே! எனவே, நாவுக்கரசரின் இந்த நல்லதொரு குறிக் கோளையாவது நாமும் பின்பற்றிப் பணிபுரிவோமாக!