பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 மக்கள்குழு ஒப்பந்தம் வேண்டியதைத் தானாகப் பயிர் செய்து கொண்டான். தன் கையே தனக்கு உதவி அல்லவா? அன்று அவன் மலையிலும் மரத்திலும் வசித்தான். விலங்குகள் தொல்லை கொடுத்தன. அதனால் பாதுகாப் பான வீடு கட்டிக் கொண்டான். மானத்தைக் காக்கவும் குளிரைப் போக்கவும் தழை போதவில்லை. அதனால் அருமையான ஆடை நெய்து கொண்டான். மனிதன் தன் கருத்தை வெளியில் சொல்லத் தெரியாமல் இருந்தான்; ஏதாவது சொன்னாலும் உடனே காற்றில் கலந்து மறைந்து விடும்; அதனால் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டான்; எதையும் எழுதி வைத்தான். இப்படி கல்வி வளர்ந்தது. அப்போது கற்களைத் தேய்த்தும் கட்டைகளைக் கொளுத்தியும் நெருப்பு மூட்டினான்; இப்போது மின் விளக்கு கண்டு பிடித்து விட்டான்; இதன்மூலம் இரவையும் பகலாக்கி விட்டான். காற்று இல்லாத நேரத்தில் முந்தி புழுங்கிக்கொண்டு இருந்தான். இப்போதோ மின்விசிறி கரகர' என்று சுற்று கிறது. மாமனார் வீட்டு மாப்பிள்ளை போல மனிதன் காற்று வாங்குகிறான். அப்போது வெளியூருக்குச் சேதி அனுப்ப வேண்டு மானால் ஆள் போக வேண்டும். வண்டி வசதி இல்லை. நீண்டநாள் பிடிக்கும். இப்போதோ அஞ்சல் (தபால்) கண்டு பிடித்திருக்கிறான். இன்னும் விரைவில் போக வேண்டுமா? தந்தி அடிக்கிறான். அது காலையில் அடித்தால் மாலையில் போய் விடுகிறது.