பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 1. அது மட்டுமா? வானொலியில் பேசுகிறான். ஓர் இடத் தில் பேசினால் அது அப்போதே உலகம் முழுவதும் கேட் கிறது. இவ்வளவுதானா? நன்றாய் இருக்கிறது! இன்னும் ஒன்று உண்டு. அது என்ன? ஒருவன் ஓர் இடத்தில் பேசுகிறான். அவன் பேசுவதை உலகம் முழுவதும் கேட்கலாம் என்றோம். அது மட்டும் அன்று! அவனை அதே நேரத்தில் உலகம் எங்கும் பார்க்க லாம். இப்படி இப்போது புதிதாகக் கண்டுபிடித்து இருக் கிறார்கள். இதற்கு "டெலிவிஷன்” (தொலைக்காட்சி) என்பது பெயர். இப்போது நிலா உலகிற்கே சென்று வந்து விட்டனர். ஆகா! என்ன புதுமை! என்ன புதுமை!! இறந்துபோன தாத்தா இப்போது வந்தால் இதை நம்பவே மாட்டார் - “சத்தியமாகவே நம்ப மாட்டார் - ஏதோ இது மாய மந்திரம் என்பார். ஆனால் இது முழு உண்மை. இதைக் கண்டுபிடித்த மனிதன் மூளையை என்ன என்று புகழுவது? நாமும் முயற்சி செய்தால் இன்னும் இதுபோல் எவ்வளவோ செய்யலாம். ஆதியில் விலங்குபோல் வாழ்ந்த மனிதன் இவ்வளவு தானா செய்தான்? இன்னும் பலே பலே காரியம் எல்லாம் செய்திருக்கிறான். அவன் குடும்ப வாழ்க்கையை எடுத்துக் கொள்வோமே! . விலங்கு இனத்தில் கணவன். மனைவி என்ற கட்டுப்பாடு உண்டா? இல்லை. இது போலவே ஆதி மனிதரும் இருந் தனர். இன்னான் மனைவி இன்னாள்; இன்னாள் கணவன் இன்னான் என்று கிடையாது. ஒருவனுக்கு ஒருத்தியே, ஒருத்திக்கு ஒருவனே என்ற கட்டுப்பாடும் இருக்கவில்லை. முரடர்கள் எளியவர் பெண்களைக் கற்பழித்து வந்தனர்.