பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. வேமன்னரின் அறிவுரை வேமன்னர் ஒரு மாபெருந் தெலுங்குக் கவிஞர்; சீர்திருத்தப் புரட்சியாளர். இவரது காலம், கி.பி. பதினைந் தாம் நூற்றாண்டிற்குமேல் பதினெட்டாம் நூற்றாண்டிற் குள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவர் பிறந்த ஊர் கொண்டவீடு' என்று சிலரும், மூகசிந்தபல்லி என்று சிலரும், 'கடாருபல்லி என்று சிலரும் கூறுவர். இவர் பாமர்ரு என்னும் ஊருக்கு அருகிலுள்ள ஒரு குகையில் இயற்கை எய்தினார் என்று சிலரும், கடாரு பல்லியில் இயற்கை எய்தினார் என்று சிலரும் பகர்வர். பிறந்த இரண்டாண்டிலேயே தாயை இழந்த வேமன்ன்ர் அண்ணி நரசாம்பாவால் வளர்க்கப்பெற்று உருவாக்கப் பட்டார். தக்க இளம்ைப் பருவத்தில் விலைமாதரின் அதாவது பொருள் பெண்டிரின் பொய்ம்மை முயக்கத்தில் பெரிதும் மூழ்கியிருந்த வேமன்னரை, பெண்ணின்பத்தில் வெறுப்புறச் செய்து நன்னெறியில் ஒழுகும்படி ஆட்கொண் டவர் இவருடைய அண்ணியார் நரசாம்பாவே. அபிராமஅய்யா என்னும் ஆசான் வேமன்னரை அறநெறிப்படுத்தி அருளுரை வழங்கினார். தமது ஒவ்வொரு பாட்டின் இறுதி அடியிலும் அபிராம அய்யாவைக் குறிப்பிட் டுள்ளார் வேமன்னர். வேமன்னரின் பாடல்கள் நாலாயிரத்திற்குமேல் அச்சா னவை தவிர, இன்னும் அச்சாகாமல் ஒலைச் சுவடியில் இருக்கும் பாடல்கள் பலவாகும். இவருடைய பாடல்களின் தொகுப்பு நூல் 'வேமன்ன பத்தியம்’ என்னும் பெயரால்