பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. முச்சங்க காலத் தமிழிசை நூல்கள் இசை பற்றியோ-தமிழ் இசை பற்றியோ இந்தக் கட்டுரை ஆராயப் போவதில்லை. தலைச்சங்கம், இடைச் சங்கம், கடைச்சங்கம் என்னும் மூன்று சங்க காலங்களில் இயற்றப்பட்டதாகக் கருதப் பெறும் தமிழ் இசை நூல் களைப் பற்றிய விவரம் மட்டும் இங்கே தரப்பெறும். தொல்காப்பியத்துக்கு முன்னும் பின்னுமான முச்சங்க காலங்களில் எழுந்த தமிழ் இசை நூல்கள் கிடைக்காமற் போயினும், அவற்றுள் சிலவற்றின் பெயர்களையாவது அறிந்து கொள்வதற்கு உரிய தடயம், இறையனார் அகப் பொருள் என்னும் நூலின் உரையில் கிடைத்துள்ளது. இது பற்றிய அவ்வுரையின் பகுதி வருமாறு. “.தலைச் சங்கம் இருந்தவர்களால் பாடப்பம் பன, எத்துணையோ பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியாவிரையும் என இத்தொடிக் கத்தன........” . - 'இடைச் சங்கம் இருந்தவர்களால் பாடப்பட்டன கலியும் குருகும் வெண்டாளியும் வியாழ மாலை அகவலும் என இத்தொடக்கத்தன்..." - "...கடைச் சங்கம் இருந்தவர்களால் பாடப்பட் டன: நெடுந்தொகை நானூறும் குறுந்தொகை நானூறும் நற்றிணை நானூறும் புறநானூறும் ஐங் குறு நூறும் பதிற்றுப் பத்தும் நூற்றைம்பது கலியும் எழுபது பரிபாடலும் கூத்தும் வரியும் சிற்றிசையும் பேரிசையும் என்று இத்தொடக்கத்தன.”