பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i40 மக்கள் குழு ஒப்பந்தம் ஆயிரு பாவினும் என்று கூறியிருப்பதனாலும், செய்யுளி யலில் பரிபாடலுக்கு உரிய இலக்கணம் (116, 117, 118, 119, 155) கூறியிருப்பதனாலும் தொல்காப்பியருக்கு முன்பே பரிபாடல் நூல்கள் இருந்தமை தெளிவு. இலக்கியம் கண்ட தற்கே இலக்கணம் கூறுவது மரபன்றோ? பரிபாடலுக்குப் பரிபாட்டு என்னும் பெயரும் உண்டு. பரிந்து பாடுவது பரிபாட்டு ஆகும். . இந்தத் தலைச்சங்க காலப் பரிபாடல் இசை நூல் என்பதற்கு உரிய சான்றாவது: "தெரிந்ததிலிருந்து தெரியா ததற்குச் செல்லுதல் என்னும் உளவியல் முறைப்படி (Psychological Method) QūGum gl §aol-āgā Qgfift திருக்கிற கடைச்சங்கப் பரிபாடல் நூலின் துணைகொண்டு முதற்சங்கப் பரிபாடல் நூலை அணுகுவோம். நம் கையி லுள்ள கடைச்சங்கப் பரிபாடல் நூல் ஒர் இசை நூல் என்பதை, ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பண்ணின் பெயரும் பண் அமைத்தவர் பெயரும் தரப்பட்டிருப்பதைக் கொண்டு. தெளியலாம். எடுத்துக்காட்டு: இரண்டாம் பாடல்: நன்னாகனார் இசை; பண்ணுப் பாலையாழ். பத்தொன்பதாம் பாடல்: மருத்துவன் நல்லச்சுதனார் இசை; பண்.காந்தாரம், - - இக்குறிப்பைக் கொண்டு, கடைச்சங்கப் பரிபாடல் நூல் இசை நூல் என்பது பெறப்படும். எனவே, தலைச் சங்கப் பரிபாடல் நூலும் இசை, நூல் என்பது தன்னில் தானே தெரிய வரும். இது பின்னரும் விளக்கிப்படும். “எத்துண்ையோ பரிபாடல் என்னும் தலைச்சங்க நூலுக்குப் 'பெரும் பரிபாடல் என்னும் பெயர் உள்ளதாகப் பிற்காலச் செய்யுள் ஒன்று தெரிவிக்கிறது. குறள் ப்ாக்க்ளர்ல் ஆன நூல் திரு என்னும் சிறப்பு அடைமொழியும் சேர்த்துத் திருக்குறள் என்னும் பெயரால்