பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 மக்கள்குழு ஒப்பந்தம் பட்டுள்ளது. இந்த நூலில், இசை, முழவு, கூத்து, தாளம், அபிநயம் ஆகிய ஐந்தும் இடம் பெற்றுள்ளன. சிலப்பதிகார உரைப் பாயிரத்தால் அறியப்பட்டன வாகக் கூறப்பட்டுள்ள நூல்கள் சிலப்பதிகாரக் காலத்தை ஒட்டியவை எனலாம். 16. பதினாறு படலம்: அகத்தியரின் மாணாக்கராகிய தொல்காப்பியர் முத லான பன்னிருவர் தலைக்கு ஒன்று வீதம் இயற்றிய பன்னி ாண்டு பகுதிகளின் தொகுப்பே பன்னிருபடலம் என ஒரு கருத்துச் சொல்லப்படுதல் போலவே, பதினாறு படலம்’ என்பதும் ஒரு தொகைநூலாக இருக்கலாம். இஃது ஒர் இசைத்தமிழ்ப் பாடல் நூல் அன்று; இசை யிலக்கணம் கூறும் இலக்கண நூலாகும். இதற்குரிய சான்று வருமாறு: சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - கானல் வரி, என்னும் தலைப்பின் தொடக்கப்பகுதியில் கூறப்பட்டுள்ள எட்டு வகை இசை யொலிச் செயல்களுள் ஒன்றாகிய "தெருட்டல்' என்பதை விளக்கத் தொடங்கிய சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர், ' தெருட்டல் என்பது செப்புங் காலை உருட்டி வருவ தொன்றே மற்றவ் ஒன்றன் பாட்டுமடை ஒன்ற நோக்கின் வல்லோர் ஆய்ந்த நூலே யாயினும் வல்லோர் பயிற்றுங் கட்டுரை யாயினும் பாட்டொழிந் துலகினில் ஒழிந்த செய்கையும் வேட்டது கொண்டு விதியுற நாடி’ என வரும்......இவை இசைத் தமிழ்ப் பதினாறு படலத்துட் கரண வோத்துட் காண்க' - எனக் கூறியுள்ளார்.