பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 மக்கள்குழு ஒப்பந்தம் 'திருவிழா பலகண்டேன் திருநீறும் பூசினனே. தெருவெலாம் விழுந்தெழுந்து தெண்டனிட்டுக் கும்பிட்டேன் ஒருபணம் கிடைத்தாலும் உண்டியிலே போட்டுவைத்தேன் 'அரகர மகாதேவா ஐந்நூறு முறை சொன்னேன். ‘குழந்தைமையில் நட்டசெடி குமர வயதைக் கடந்து தழைந்த பெரு மரமாகித் தளிர்விட்டுப் பூத்ததுவே குழைந்திடுநல் லன்புடனே கோயில்கள் சுற்றிவந்தேன் பழந்தேங்கா யுடன் சென்று பலபாக்கள் பாடினனே. ‘துறைகள் மூழ்கிவந்தும் தொண்டுபல செய்திட்டும் முறையாய்ப் பலமுயன்றும் முழுமுதலே கண்டிலனே இறைவா எங்கொளிந்தாய் ஏனொளிந்தாய் இல்லையோ நீ இறையே இரங்காயோ என்னசெயின் கண்டிடலாம்?'. 3 தமிழக அரக நடத்திய முதியோர் இலக்கியப் பயிற்சிப் பண்ணையில் நான் பயிற்சி பெற்றபோது, அகவை கடந் தோர் வாசிப்பதற்காக எளிய நடையில் சில பாடல் மடல் கள் எழுதினேன். அவற்றுள், ஒரு மாற்றாந் தாய்' என்னும் தலைப்புடைய மடலை இப்போது தருகிறேன். பொதுவாக மாற்றாந் தாயைக் கொடியவளாக்கிக் காட்டுவது உலக நடைமுறை. ஆனால் அம்மாற்றாந் தாயை நான் வேறு கோணத்தில் படம் பிடித்துக் கொடுத் துள்ளேன். ஒரு மாற்றாந்தாய் இரங்கத்தக்க தனது எளிய நிலையைத் தானே கூறுவதாக உள்ள அம்மடல் இதோ: