பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 165 டிக்கொண்டேயிருக்கும் பான்மையை வியந்து ஒரு முறை சில பாடல்கள் இயற்றினேன். அவற்றுள் ஒன்றை இங்கே தருகிறேன். 'ஒருமகன் ஈட்டி யுள்ள உயர் பொருள் அதனில் பங்கு தெருமகன் கேட்கான் பற்றான் திருடனைத் தவிர; தாயார் தருமகன் மட்டும் பங்கு தாவெனத் தருவான் தொல்லை ஒருவயிற் றில் பிறந்த உறவவன் காட்டும் கத்தி” (உறவவன் = உறவு அவன். தாயார் தருமகன் = உடன் பிறந்தவன்) 5 நாம் பிறந்துள்ள மாந்தர் குலத்தின் மாறுபட்ட பல்வேறு நிலைகளைக் கண்டபோது, என் உள்ளத்தில் கிளர்ந்தெழுந்த உணர்ச்சியை மாந்தர் குலம்’ என்னும் தலைப்பில் ஒரு பாடலாக எழுதினேன். தொடர் கருத் தாதலான் இதனை ஆசிரியப்பாவாகவே அமைத்துள்ளேன். இதுதான் அப்பாடல்:- - "மாந்தர் குலம்' ' அரிது மானிட ராதல் அரிது பெரிது மானிடப் பிறவி பெரிதாம் என்றே பலரும் இயம்ப இளமையில் நன்றே கேட்டு நான் மகிழ் வுற்றேன் உயிர்களுள் உயர்ந்த மாந்தர் குலத்தில் பிறந்த எனதுநற் பேற்றை எண்ணி