பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மக்கன்குழு ஒப்பந்தம் களும் தங்கள் மாமன்னனை இழந்து வறிதே திரும்பி வருகையில், இராசாதித்தனால் கட்டப்பட்ட திருநாவ லுார்க் கோயிலில், இறந்துபோன அவன் பெயரால் பல திருவிளக்குகள் ஏற்றுவதற்கு அறக்கட்டளைகள் ஏற்படுத் திச்சென்றதாகப் பல கல்வெட்டுக்கள் கூறுகின்றன. திருநாவலுார்ப் பெரிய கோயிலுக்குள், சிவன்கோயில் பகுதிக்கும் அம்மன்கோயில் பகுதிக்கும் இடையில் வரதராச பெருமாள் கோயில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சிதம்பரம் போல் திருநாவலுாரிலும் சிவன்கோயில் எல்லைக்குள் பெருமாள் கோயிலும் இருப்பது ஒருவனே தேவன்' என்னும் பேருண்மையை விளக்குகிறதன்றோ? அடுத்து, மற்ற ஊர்க் கோயில்களில் அமர்ந்த கோலத்தில் காட்சி யளிக்கும் ஆலமர் செல்வனாம் தட்சணாமூர்த்தி இவ்வூர்க் கோயிலில் நின்ற கோலத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மற்றும், கோயிலில் உள்ள பல்லவர் காலச் சிற்பங்கள் பலவும் பார்த்து மகிழத்தக்கன. பெரிய கோயிலின் தென்கிழக்கு மூலையில் சுந்தரர் - பரவையார் - சங்கிலியார் ஆகியோர்க்கு ஒரு தனிக்கோயில் உள்ளது. இம்மூவர்க்கும் கோயிலில் மிக மிக அழகிய உலோக உருவச்சிலைகளும் உள்ளன. சுந்தரர் என்றால் சுந்தரரேதான் - அவரது சிலை அவ்வளவு சுந்தரமாக - அழகாகக் காட்சி தருகிறது. இங்கே ஆண்டுதோறும் ஆவணி - உத்திரநாளில், தமது பாடலால் ஊருக்கும் கோயிலுக்கும் ஒருசேரப் பெருமை தேடித் தந்த சுந்தரரின் பிறந்தநாள் விழாவும், ஆடி-சுவாதி நாளில் அவர் வீடுபேறுற்ற நாள் விழாவும் மிகவும் சிறப் பாகக் கொண்டாடப்படுகின்றன. சுந்தரர் பிறந்த மனை