பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மக்கள்குழு ஒப்பந்தம் " நாதனுக்கு ஊர் நமக்கு ஊர் நரசிங்க முனையரையன் ஆதரித் தீசனுக் காட்செயும் ஊர் அணிநாவலுார் என்று ஒதநற் றக்கவன் றொண்டனா ரூரன் உரைத்த தமிழ் காதலித் துங்கற்றும் கேட்டவர் தம்வினை கட்டறுமே”. என, நாவலுார் கடவுளுக்கும் ஊர் - தமக்கும் ஊர் என்று குறிப்பிட்டுள்ளார். ஆரூரன் என்னும் பிள்ளைமைப் பெய ருடைய சுந்தரர், பாடலின் இறுதியில், தாம் உரைத்த தமிழைக் காதலிப்பவர் - கற்பவர் - கேட்டவர் தீவினைகள் கட்டறும் எனத் தெரிவித்துள்ளார். சுந்தரர் தமது பாடலைத் தமிழ்’ என்னும் தண்ணிய பெயரால் சுட்டி யிருப்பதும் அந்தத் தமிழைக் காதலித்துக் கற்கவேண்டும் எனக் குறிப்பிட்டிருப்பது மாகிய பான்மை வியத்தற்கும் நயத்தற்கும் உரியது. திருநாவலுாரைப் பாடல் பெற்ற பதி' என்னும் பாராட்டுக்கு உரியதாக்கிய சுந்தரர் தமிழ்' வாழ்க!