பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பினரியின்மை "பிணியின்மை' என்னும் தொடரைத் திருக்குறளில் காணலாம்.

  • பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்

அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து (738) என்பது குறள். மக்கள் பிணியில்லாமல் தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதை 'மருந்து என்னும் தலைப் பில் வற்புறுத்தியுள்ள வள்ளுவனார், இந்தக் குறளில் நாட்டிலே பிணி ஏற்படாமல் அரசன் காக்க வேண்டும் என இந்தப் பொறுப்பை அரசுத் தலைவன்மேலும் போட். டுள்ளார். மற்றும், ' உறுபசியும் ஓவாப்பிணியும் செறு பகையும் சேரா தியல்வது நாடு" (734) என்னும் குறளிலும் இந்தக் கருத்து இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் நோய் தீர்க்க அவ்வந்நாட்டு அரசு ஆவன செய்து வருவதைக் காண்கின்றோம். இந்தப் பணி இன்னும் சிறந்த முறையில் செய்யப்படல் வேண்டும். வெள்ளம் வருமுன் அணை கோல வேண்டும். நோய் வருமுன் வராதவாறு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண் டும். நோய்க்கு இடம் கொடேல்' என்பது ஒளவையின் ஆத்திசூடி (75) அறிவுரை. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது ஒரு முதுமொழி. ஆண்டுதோறும் ஐம்பது வண்டி நெல் வரும் செல்வர்கள் சிலர், தித்திப்புநீர் நோயால் மூன்று வேளையும் கேழ்வரகுக் கூழ் குடிக்கிறார் கள். என்ன செய்வது!