பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மக்கள்குழு ஒப்பந்தம் உடம்பு நன்றாயிருந்தால்தானே பணிகள் செய்ய முடியும்? பிறர்க்குப் பணிபுரிய இயலாவிடினும், தமக்கு வேண்டிய வேலைகளையாவது தாம் செய்துகொள்வதற்குப் போதிய உடல்நலம் வேண்டுமல்லவா? சுவர் நன்றாயிருந் தால்தானே ஒவியம் நன்கு தீட்ட முடியும்? 'உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' - (724) ' உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்று உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே"-(125) என்னும் திருமூலச் சித்தரின் திருமந்திரங்கள் ஈண்டு ஒப்பு நோக்குதற் குரியன. பிணியின்றி வாழ்வதற்கு மக்கள் என்னென்ன செய்ய வேண்டும்? உணவில் கட்டுப்பாடும், உடை - உறையுள் - சுற்றுப்புறம் முதலியவற்றில் தூய்மையும் வேண்டும். 'சுத்தம் சுகம் தரும்', 'கூழானாலும் குளித்துக்குடி - கந்தையானாலும் கசக்கிக்கட்டு என்னும் மெய்ம்மொழி களின் படிப்பினையை வாழ்க்கையில் நடைமுறைப் படுத்த வேண்டும். தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக் காதே’ என்பது ஒரு பழமொழி. நீர்நிலைகளைத் தூய்மை யிழக்கச் செய்யலாகாது. தூய்மையில்லா நீரால் பல நோய்கள் வரும். எனவே, தூய்மையுள்ள நீரையே பயன் படுத்த வேண்டும்.