பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 51 உணவுக் கட்டுப்பாட்டைப் பற்றி வள்ளுவர் அளவுமீறி வற்புறுத்தியுள்ளார் என்று கூறலாம் போல் தோன்றுகிறது. அவர் என்னதான் கூறியுள்ளார் என்று பார்ப்போம்: முன் உண்ட உணவு முற்றும் செரித்தபின் - நன்கு பசி ஏற்பட்டபின் உண்ண வேண்டும். அஃதும் மீண்டும் செரிக் கும் அளவு அறிந்து உண்ண வேண்டும். இவ்வாறு செய்பவர் வாழ்க்கையில் மருந்தே தேவையின்றி உடம்பை நீண்ட நாள் காத்து உயிர் வாழ்க்கையை நீட்டிக்கொண்டிருப்பர். செரித்தபிறகு அளவோடு உண்பவனிடத்தில் இன்பம் இருக்குமெனில், மிக்க பெருந்தீனியை மேய்பவனிடத்தில் நோயும் மிக்கிருக்கும்-என்பது விளங்கும். அத்தகையோர் அளவில்லா நோயால் அல்லலுற்று விரைவில் மடிவர் - என்றெல்லாம் வள்ளுவர் வகுத்துரைத்துள்ளார்: " அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கு மாறு' (943) '" இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபே ரிரையான்கண் நோய்” (946) ' தீயள வின்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும்” (947) * மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்' (942) என்பன குறள்கள். தனி மாந்தர்க்கு நோய் வராதிருக்கும் வழியைச் சொன்னதோடு வள்ளுவர் நிற்கவில்லை; நோய் தீர்க்கும் மருத்துவர்க்கும் ஏதேதோ சிறிது சொல்லிவைத் துள்ளார். அவையாவன: என்ன நோய் என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண் டும் - அதோடு, அந்த நோய் வந்ததன் காரணத்தையும் அறிய வேண்டும். நோய் போக்கும் வழிமுறையினையும்