பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மக்கள் குழு ஒப்பந்தம் ஆய்ந்துணர வேண்டும். மற்றும், நோயாளியின் நிலைமை யினையும் நோயின் அளவையும் கவனித்து, எந்தெந்த நேரத்தில் எப்படி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ப தையும் கருத்தில் கொண்டு, நோய் தீர்ப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் - என்பது வள்ளுவர் அறிவுரை. " நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்புச் செயல்” (948) f ' உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல் (949) என்பன குறள்கள். இங்கே கற்றான் என்பது, மருத்து வனை அதாவது டாக்டரைக் குறிக்கும். திருவள்ளுவர் கூறியிருப்பதை நோக்குங்கால், ஒரு காலத்தில் ஒருசில இடங்களிலாயினும் அளவுமீறி உண்ணும் அளவுக்கு வளம் மிக்கிருந்தது என்பது புலனாகும். பட்டினி பெரு மருந்து என்னும் பொருளிலுள்ள லங்கணம் பரம ஒளஷதம்' என்னும் பட்டறிவுமொழி ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. ஒரு சில நாட்களில் பட்டினி நோன்பு கொள்வதும் இது கருதியே போலும்! நோய் வருமுன் காக்கவேண்டியதிருக்க, நோய் வந்த பின்னும் காவாதார் பலர் உளர். இவர்கள் நாள்-நட்சத் திரம் பார்ப்பவர்கள். வெள்ளிக்கிழமை வளர்ந்த நாள் - அன்றைக்கு மருத்துவரிடம் சென்றால் நோய் வளரும்; பாட்டிமையிலும் போகக் கூடாது - என்றெல்லாம் கூறி ஆறப்போட்டு அல்லல்படுபவர்கள் இவர்கள். நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை என்னும் அதிவீரராம. பாண்டியனின் வெற்றிவேற்கை (47) அறிவுரையை இன்னார் ஏற்பது எந்நாளோ?