பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 மக்கள்குழு ஒப்பந்தம் அரும்பெரும்பணி என்ன புரிந்தால் எப்போதும் எல்லோரும் பாராட்டுவர்? ஆம், முற்கூறிய பல்வகைச் செயல்களும், செய்தவர் களின் உடல்வன்மை, உழைக்கும் ஆற்றல், அறிவுத்திறன், ஆரவாரம் முதலியவற்றை அறிவிக்கின்றனவே தவிர, அவற்றால் மன்பதைக்குக் (சமுதாயத்திற்குக்) கிடைக்கக் கூடிய நேரடியான பெரு நன்மைகள் யாவை? இல்லை யாதலின் அவர்கள் சிலபோதுமட்டும் - சிலரால் மட்டும் . சிறிதளவுமட்டும் - பாராட்டப்பெறுவர். ஆனால், தம்மைப் பற்றிக் கவலைப்படாமல், தம் உடல் பொருள் உயிர் அனைத்தையும் மக்கள் கூட்டத்திற்குப் பயன்படுத்துபவர் எவரோ-அதாவது, உலகிற்கு உதவுபவர் எவரோ-அவரே எப்போதும் எல்லோராலும் பெரிய அளவில் பாராட்டப் பெறுவார். அவருக்குக் கிடைக்கும் அழியாப் பாராட்டுக்கே புகழ் என்று பெயராம். - உலகிற்கு உதவவேண்டும் என்றால், அந்த உதவி எந்தக் கோணத்திலும் இருக்கலாம் - அந்த ஈகை எந்த உருவத்திலும் இருக்கலாம். அதனால் ஒருவர்க்கும் தீமை யின்றிப் பலர்க்கும் பயன்கிடைக்க வேண்டும். அத்தகைய ஈகையால் தான் நிலைத்த புகழ் கிடைக்கும். பிறர்க்கு ஈபவரைப் பற்றித்தான் மக்கள் அக்கறை கொள்வர் - எப்போதும் அவர் புகழே உரைப்பர். இத்தகைய புகழை விட ஒருவருக்குச் சிறந்த ஊதியம் இப்பிறவியில் வேறு என்ன இருக்க முடியும்? இவ்வுலகில் ஒருவருடைய உடல், உடைமைகள் எல்லாம் அழிந்துவிடும்; ஆனால் அவரது உயர்ந்த புகழ்மட்டும் என்றும் அழியவே அழியாது. இக் கருத்துகள் உள்ள குறட்பாக்கள் வருமாறு: “ ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு”. (231)