பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 7 ஆறுமுகத்துக்கு ஐந்து வயது நிரம்பியது. ஊரில் ஒரு சிறிய பள்ளிக்கூடம் உண்டு. அதன் ஆசிரியர் கண்டிப்பான பேர்வழி. ஏழைப் பையன் என்றும் பார்க்கமாட்டார்; பணக்காரப் பையன் என்றும் பார்க்க மாட்டார். எல்லோ ரும் அவருக்குப் பொது. அது சரிதானே! அது தெரிந்தும் சாமிநாதன் ஆறுமுகத்தை அவரிடம் படிக்கவிட்டார். மகன் தப்பு செய்தால் உடம்புத்தோலை உரித்துவிடச் சொன் னார். அம்மாடி, சிலர் இதை நம்பவே மாட்டார்கள். என்ன இது! மகனை அடித்த அண்டை வீட்டு அப்பாவி மேல் சாமிநாதன் வழக்குத் தொடுத்தார். அதே மனிதர் அதே மகனுடைய தோலை உரிக்கும்படி ஆசிரியரிடம் சொல்லி இருக்கிறார். இதன் காரணம் என்ன? இதிலும் ஏதாவது மறைபொருள்-இரகசியம் உண்டா? ஆமாம். நாம் கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடிப்போம். இன்னும் முயற்சி செய்து பார்ப்போம். நாட்டில் போலீஸ்காரர் இருக்கிறார்; அவர் சிலசமயம் நம்மில் சிலபேரை மிரட்டுகிறார்; சில சமயம் துரத்திப் பிடிக்கிறார்; சிலசமயம் தண்டனை கிடைக்கச் செய்கிறார். அவரோ மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கிப் பிழைப்பவர். ஏன் அவர் மக்களை அப்படி செய்யவேண்டும்? அப்படி செய்பவரை மக்கள் ஏன் மதித்து வருகிறார்கள்? நீதிபதி இருக்கிறார். அவர் சிலருக்குப் பணம் தண்டம் போடுகிறார் ; சிலரைச் சிறைக்கு அனுப்புகிறார்; சிலருக்குத் தூக்குத் தண்டனை கொடுக்கிறார். அவரும் மக்கள் வரிப் பணத்தில் வாழ்பவர்தான். ஏன் அவர் மக்களை அப்படி செய்ய வேண்டும். அப்படி செய்தும் மக்கள் அவரை மதிப்பது ஏன்?