பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 97 நாவுக்கரசர் ஏழாம் நூற்றாண்டில் நாட்டில் ஒரு பெருந்தலைவராய்த் திகழ்ந்தவர். அவர், நாட்டு மக்க ளிடையே, நல்ல பேச்சாலும் எழுத்தாலும் நல்லற நெறி களைப் பரப்பியதல்லாமல், தாம் ஓர் உயர்ந்த பணியினைச் செய்தும் காட்டினார். இன்று தெருக்களைத் தூய்மை செய்யும் தொழிலாளர் களைத் தோட்டிகள் என்றும் ஒட்டர்கள் என்றும் உலகம் இழித்துப் பேசுகிறது. தொழில்களுக்குள் மிக மிகத் தாழ்ந்த தொழிலாகக் கருதப்படுவது இந்தத் தொழில்தான்! இது போன்றதொரு தொழிலைத்தான், நாட்டின் மாபெருந் தலைவராய் மதிக்கப் பெற்ற நாவுக்கரசர் தம் வாழ்க்கையில் செய்து காட்டினார். மண்ணெண்ணெய் வாங்கி வருவதற்காக அல்ல-மணம் மிக்க மலர்மாலைகளை வாங்கிவரப் பெற்றோர் அனுப்பி னாலும், கடைக்குச் சென்றுவரக் கூசுகின்ற நம் நாட்டுப் பிஞ்சுப்படிப்பாளிகள், நாவுக்கரசர் நாட்டிற்குச் செய்த நல்ல பணியினைப் பற்றிச் சிறிது நேரமாயினும் எண்ணிப் பார்க்கவேண்டும். அண்ணல் காந்தியடிகளின் அறக்குடிலில் தாமும் வந்து சேர விரும்புவதாகக் கடிதம் எழுதுவோர்க்கு, அண்ணல் அவர்கள், நீங்கள் இங்கே வந்து சேரின், நீங்களே மலக் கூடம் தூய்மை செய்யவேண்டும்’ என்று பதில் எழுதிய வரலாறு ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. உழவாரப் பணி: திருநாவுக்கரசரின் தொண்டுக்கு உழவாரத் திருப்பணி என்பது பெயர். அவர், வடிவத்தில் தோசை திருப்பி' போல் காட்சியளிக்கும் இரும்பாலான கருவியொன்றினைக்